பாலகுமாரன் பக்கங்கள்
4:
ஆசை என்னும் வேதம் - கற்றுக் கொடுத்தவை
நாளைக்கு விடியும்னு நம்பத்தான்
வேணும். நம்பறது தவிர வேறு வழியில்லை. இப்படியே ஜென்ம ஜென்மத்துக்கும் இருட்டாகவே இருந்துட்டா
என்ன பண்ணுவோம்னு யோசிச்சு கண்ணை மூடிண்டா விடிவேயில்லை. வெலிச்சம் கூட இருட்டாத்தான்
தெரியும்.. முழிச்சுக்கோ வசுமதி.
இது… இதுதான் தவறு. இதுதான்
அத்துமீறல். இதுதான் சகல பிணக்குக்கும் வித்து. பிறர் நெஞ்சுக்குள் புகுந்து அந்தரங்க
ரத்தத்தை நக்கிப் பார்க்கிற நாய்க்குணம். மற்றவரை மதிக்காத மிருகத்தனம்
நல்ல புருஷன் என்பவன் வஞ்சனையில்லாதவன்.
வஞ்சனையற்றவனுக்கு பர்வசம் இயலபு. பரவசப்பட்டவன் நெகிழ்ச்சிக்கு அடிமை. நெகிழ்ச்சி
ஒரு புருஷனை மேலும் நல்லவனாக்கும். நல்லவனுக்கு வஞ்சனையில்லை. இது வட்டம். விரியும்
வட்டம்.
“இன்னும் கத்துக்க இருக்குன்னு
தோணறதா?”
“நிறைய”
“அப்ப கவலையே இல்லை. உன்னால
கோப்பபட முடியாது. எல்லம் தெரியும்னு நெனைக்கறவா தான் மூர்க்கமா கோப்பப்டுவா. கூட்டம்
பேசுவா. வாதம் பண்ணுவா. வாதத்துல தோத்துப் போய் கை நீட்டுவா. வன்முறை ஆரம்பமே புரிஞ்சுக்க
மறுக்கறதுலதான்.
எந்நேரமும், யார் கிட்டேயும்
எது பத்தியும் அட்வைஸ் கேட்காம இருக்கறதுதான் சரி. இப்ப நீ பேசறது இதமா இருக்கு. நீ
நல்லவன். இப்ப நீ பேசறது இதமா இல்லை. நீ கெட்டவன்னு பிரிக்கறதை விட, பிரிச்சு முட்டிக்கறதை
விட என் விஷயம், என் தீர்மானம்னு இருங்க.
நேத்திக்கு நடந்தது பொய், நாளைக்கு நடக்கறதும் பொய். இன்னிக்கு நிஜம். நேத்திய
கலவரம். நாளைய பயம்.
புருஷன், புருஷனாய் இருக்கும்போது
பெண் பத்தினியாய் இருக்க முடியும். பத்தினியாக மனைவி மலர, ஏக பத்தினி விரதம் சுலபம்.
அமைதியாய் இரு. வசுமதி
அமைதியாய் இரு. திடுமென்று மழை பெய்ய, அலையும் காகம் போல் தவிக்கிறாய்.ஆந்தை போல் இரு.
இன்னும் ஒடுங்கு, உள்ளே பதுங்கு. சூழல் கவனி. மழை வலுக்கட்டும். காத்திரு. இரவு வரும்
வரை அசையாத ஆந்தை போல் கவனமாய் காத்திரு. கற்பனைகளை உதறு. கனவுகளிப் புறக்கணி. மழை
இன்னும் வலுக்கட்டும்.
“பச்சை மரம் பார்த்தா பொம்பளை ஞாபகம், பொம்பளை பார்த்தா பச்சை மரம் ஞாபகம்”
அயல் தேசத்துக் கவிதை
:
உன்
குழந்தையும்
என்
குழந்தையும்
நம்
குழந்தையும்
விளையாடுகின்றன.
கவிதைகள்:
கருணை மனு
நீயும்
நானும் பேசிச் சிரித்த
இடத்தில்
இன்று
புல்
முளைத்தது
பொய்யில்லை.போய்ப்
பார்.
போகையில்
ஒரு விண்ணப்பம்.
உன்
மர(பு)ச் செருப்பைக்
கழற்றி
விட்டு
மெல்லப்
போ. நுனி விரல் நில்.
அங்கே
புற்களாவது வளரட்டும்
மிதிபடாமல்.
பிளந்து போனவைகள்:
மண் பிளந்து நெல் முளைத்து
உழவர்கள் உவகை கொண்டார்
மலை பிளந்து தங்கம் கண்டார்
தேசத்தில் திண்மை வந்தது.
தனைப் பிளந்து சிப்பி மிதக்க
மனிதர்கள் முத்து என்றார்.
கடல் பிளந்து பாதை போட்ட
யேசுவை கருணை என்றார்.
உனைப் பிரிந்த திருநாளன்று
தரை பிளக்க பேய் மழை கொட்ட
ஜலம் பிளந்து நீயும் நானும்
போனதோர் நிகழ்ச்சி உண்டு.
இருள் பிளந்து சாலை விளக்கு
எரிகின்ற ஈர இருட்டில்
என்னிலிருந்து உனைப்
பிரிந்தேன்
இது மட்டும் வலியேன் தோழி.
பிளவுதான் வாழ்க்கையென்றால்
பேசிச் சிரித்தவை பொய்யா
தோழி.
மறுப்புக் கவிதை
நீயும்
நானும்
பேசிச்
சிரித்த இடத்தில்
இன்று
பசும்புற்கள் முளைத்தன.
நாளை
பூக்கள் மலரும்.
மலர்ந்தவை
வண்டோடு
மயங்கியே
தினமும் பேசும்
நீயும்
நானும் கரம் பிடித்து
பேசிய
இடத்தில்
காதல்
வளரும்
இடைவிடாது
நாமங்கு
இல்லாத
போதும்

No comments:
Post a Comment