Thursday, August 15, 2019

பாலகுமாரன் கற்றுக் கொடுத்தவை

பாலகுமாரன் கற்றுக் கொடுத்தவை

நல்லதை எதிர்பார்ப்பின்றி 
சொல்லித் தருபவனெல்லாம் குருதான் 

இது ஐயாவின் வார்த்தைகள்

இவர் தோளில் கை போட்டு தட்டிக் கொடுக்கும் தோழனாக,  
சொல்லி கொடுக்கும் ஸ்தானத்தில் குருவாக, 
குழப்பங்களுக்கு சில சில தீர்வுகள் சொன்ன வழிகாட்டியாக,
சில சமயம் அதட்டி மிரட்டும் தகப்பனாக 
எனக்குப் பன்முகம் காட்டியவர்


து 1983 இல் தொடங்கியது.
அன்று முதல் அவர் சொல்லிக் கொடுத்தவை ஏராளம்
அவற்றில் படித்ததில் பிடித்த வரிகளை 
என் டைரிகளில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.


அகராதி போல் அவ்வப்போது தேவைப்படும்பொழுதுகளில் 
அவற்றைப் புரட்டுவது என் வழக்கம்.

காகிதத்தில் இருக்கும் அந்தக் காந்த வரிகளை
என் கணிணி வழியே கடத்துகிறேன் யாவருக்கும்.

எனக்குப் பிடித்த இந்த வரிகள் எல்லோருக்கும் பிடிக்கலாம்.
பிடித்தவர் ரசித்து ஒரு முறை பாலா ஐயாவை நினக்கட்டும்.

சின்னச் சின்ன வரிகளும் உண்டு.
பெரும் தொடர் பத்திகளும் இதில் அடக்கம்.

இன்று (15/08.2019) முதன் முதலில் "இரும்பு குதிரைகள்" நாவலிலிருந்து 
நான் கற்றுக் கொண்டவை அடுதத பக்கத்தில்.

ஒவ்வொரு நூலிலிருந்தும் கற்றவைகளை இனி தனித் தனி பக்கங்களில் பதிகிறேன்

No comments:

Post a Comment