Saturday, August 17, 2019

என்றென்றும் அன்புடன் – கற்றுக் கொடுத்தவை


பாலகுமாரன் பக்கங்கள் 6:

என்றென்றும் அன்புடன் – கற்றுக் கொடுத்தவை

வேண்டியதை விரும்பு. வேண்டியதை  வெறுப்பது வாழ்க்கையல்ல. தப்பித்தல்.


ஆசை உள்ளவனுக்கே வாழ்க்கை.  நாம் வாழ ஆசைப்படுவோம்


 வாழ்க்கை கூட … மாறுவது தெரியாமல் மாற வேண்டும்.  தாமதப்பட்டு தயங்கி மாறுகிற போது ஊர் விசில் அடித்து விடுகிறது


என் புத்தி, என் குணம் என் ஜாதியால வர்ணிக்கப்படறபோது கோபம் வரத்தான் செய்யுது.  
புத்திசாலித்தனம் ஜாதியால பாகுபட முடியாது. ஆனா குணம் ஜாதியால பாதிக்கப்படலாம்


“அவங்க  அவங்க ஈகோ பிச்சுக்கிட்டு கிளம்பி எழுத வர்றீங்க.  அப்புறம் தொண்டுன்னு பொய் என்னா?”
“ஈகோதான் . இரண்டுங்குலம் உசரமா நடக்கனும்னு ஆசைதான். எல்லா ஆரம்பமும் அப்படித்தான். காவி உடுத்திக்கறதுகூட ஈகோ ஆரம்பம்தான். பின்னால மொள்ள மொள்ள என்ன செய்யறோம்னு கேள்வி கேட்டுக்கிட்டா ஈகோவை உதிர்த்திடலாம். குழந்தைகளுக்கு பருப்பு சாதம் ஊட்டற மாதிரி பசிய பிசைஞ்சு அம்மா ஊட்டலாம்”


பொண்ணு நெனைச்சா சொடுக்கற நேரத்தில தாசியாயிடலாம்.


“I Love my wife. உண்மையான லவ் தோத்துப் போனதா சரித்திரமேயில்லை. மறு கன்னததை காட்டுங்கறதுக்கு வலியைப் பொறுத்துக்கரேன்னு அர்த்தமில்லை. உன் கோபம், நீ செய்ற அவமானம் என்னை ஒண்ணும் பண்ணாது. இத்தனையும் தாண்டி Still I Love You ன்னு அர்த்தம்”


“ஆம்பளையானா என்ன பொம்பளையானா என்ன ? உடம்பு அமைப்புத்தானே வித்தியாசம், உணர்ச்சி, லட்சியம், வெளிப்பாடு எல்லாருக்கும் ஒண்ணுதானே சபிதா”


துணை என்பது மாயை. உண்மையில் துணையாக யாருமில்லை. நெஞ்சருகே ஒட்ட நின்று நினவு முழுதும் விழி வழியே புரிந்து கொள்ளும்துணையோ ஸ்நேகிதமோ எவருக்கும் லயிப்பதில் கடவுளைத் தேடுவதும் துணையைத் தேடுவதும் ஒன்றே…………
மறுபடி கடவுளைப் போலவே மனிதர்களும் தேவையாய் இருக்கிறாடர்கள் தனிமையைத் தனித்துத் தாங்க முடியவில்லை.தனிமையை பகிர்ந்து கொள்ள தனக்கு தனிமையில்லை என்று மறுதலிக்க உறவுக்கு ஏக்கம் கொள்கிறது.


ஞானம் முற்றித்தான் இது ஒரு போதும் என்று கை விட்டு விட்டாரா. தேடலே இல்லை என்பதுதான் ஞானமா? வருத்திக்கொள்ளாத்ரிருப்பதுதான் வாழ்க்கையா?


யார் இங்கே கெட்டவர்கள் ? யார் பிடிக்காமல் போனவர்கள் அப்பா கெட்டவர் இல்லை. அம்மா கெட்டவள் இல்லை. தம்பியில்லை, அக்கா இல்லை. என் ஸ்னேகிதர்களோ, ராகவன் ஸ்னேகிதர்களோ இல்லை. கீழ் வீட்டுக்காரி கெட்டவள் இல்லை. பிச்சம்மா இல்லை ……………………………………………………………………………………… …………… அவரவர் அபிப்ராயம் சொல்லப்பட்டதே தவிர யார் கெடுதல் செய்தார்கள். யார் கெடுதல் செய்ய முடியும் ?


ஸ்வாமியாவது, மண்ணாவது. புருஷன்தான் ஸ்வாமி. பொண்டாட்டிதான் தேவதை


No comments:

Post a Comment