Thursday, August 15, 2019

மெர்க்குரிப் பூக்கள் – நாவல் கற்றுக் கொடுத்தவை


மெர்க்குரிப் பூக்கள்  – நாவலிலிருந்து கற்றுக் கொண்டவை



பாலகுமாரன் பக்கங்கள் 2: 

o   எதிலும் அவமானம் அற்றுப் போவதுதான் முதல் படி.

o   அன்புதான் உலகப் பொது விதி, ஒழுக்கம் காலத்துக்குக் காலம் மாறுபாடு அடைகிற விஷயம்.. ஒழுக்கம் இவர்கள் தலையில் அடைக்கப்பட்ட சமாச்சாரம். அன்பு என்பது இயல்பாய் கிளறும் அம்சம். ஒழுக்கத்தை இடுப்பில் இறுக்கக் கற்பு பெல்ட்டால் கட்டிக் கொண்டு எப்படி அன்பு செய்ய முடியும்.ஹிம்சையில் இருக்கிறவன் எப்படி சிரிக்க முடியும்?

o   ஒரு  பெண்ணை சந்தோஷப்படுத்தாதவன், திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பெண்கள் இங்கே விற்பனைப் பொருட்கள். வரதட்சணை வாங்குபவனைக் காட்டிலும், எப்படியாவது விற்க நினைக்கிறவன்தான் பாவி.

o    சியாமளி :  யாராவது என்னைத் தாங்கனும்.தோள்ல வச்சிண்டு போகனும். மனசைப் புரிஞ்சுண்டு பேசணும். பேச்சே இல்லாம நிணைப்பே பாஷையாகி, நான் நினைக்கிறதையே நீ நினைச்சு, நீ நினைக்கிறதையே நான் நினைச்சு, நினைக்கிற போதே ஒருத்தொருக்கொருத்தர் காரியம் பண்ணி…… பொம்மனாட்டி ஆடோ, மாடோ இல்லை சங்கரா…
o   ………ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழுற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ, அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை. உடம்பெல்லாம் கீறி ரத்தமானாலும் சரி அருவியோடு அடிச்சுண்டு போனா என்னன்னு தோணறது சங்கரா.

           நான் :
            எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு. அதை
உன்னிடம் சொல்வதெப்போ?
நாளை, நாளை மறுநாள், நாலு நாள் கழித்து
மெல்ல ஒரு ஞாயிறு மாலை வெளியில்
அதை உன்னிடம் சொல்வதெப்போ?
எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு
அதைச் சொல்ல ஏன் இத்தனை தயக்கம் ?
வால் தூக்கி தசைகள் காட்டிப் பல்லிளித்துக் குளம்பால் கீறும்
எனக்குள்ளே இருக்கும் மிருகம்
உனக்கொருகால் பிடித்துப் போனால்?
எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு

கோபாலன் :
காதல் என்பது நல்ல விஷயம் சங்கரா. ஆனால் அது ஒரு பெண் மீது ஏற்படுவது மட்டுமில்லை. எண் ஒரு ஆரம்பம்.சுலபமான ஆரம்பம்.. சுகமான ஆரம்பம்.. இது பரவ வேண்டும். மனைவி, குழந்தை, குடும்பம், அண்டை, அசல், நண்பர், நாடு என்று பரவ வேண்டும்.
            காதல் என்பது விட்டுக் கொடுப்பது.கல்மிஷமின்றி விட்டுக் கொடுப்பது. சுலபமாய் விட்டுக் கொடுப்பது. வளைப்பதல்ல. பிறரை தன் விருப்பத்திற்கு வளைத்துப் போடுவதல்ல. நீ யாரையோ வளைத்துப் போட்டிருக்கிறாய் அல்லது வளைக்கப்பட்டிருக்கிறாய். காதலில் இத்தனை அழுகை இல்லை சங்கரா. அஜீரணம் பிடித்த குழந்தை மாதிரி சிணுங்கி சிணுங்கி அழுவது காதல் அல்ல. சுயநலம்.

கீதையில் அர்ஜூனன் :
யுத்தம் என்பது எனக்கு சந்தோஷமானது. எதன் பொருட்டாவது நான் கடைசி வரை சண்டையிட்டுக் கொண்டே இருக்க விரும்புகிறேன்


o   “அவை கதவுகளல்ல அரசி ! நம்மைப் போலவே  நல்ல காதலர்கள்”
“காதலர்களா? புரியவில்லையே மன்னா”
ஆமாம் அரசி. நாம் கூடும்போது கூடி, நாம் பிரியும்போது பிரிந்து நம்மைப் போலவே… புரியவில்லையா அரசி ?

o   பயம். பயம்தான் வன்முறைக்குக் காரணம். பாதுகாப்பைத் தேடித்தான் பலாத்காரம் ஏற்படுகிறது………
o   பழக்கப்படுத்தாத பட்டாளம் சேதம் அதிகமாக்கும். அதிகம் சேதமாக்கும்.

o   எது அடிப்படை என்பதுதான் யாருக்கு ம் தெரியவில்லை. அவரவர்க்கு சௌகரியமாய் அடிப்படைகள் விதித்து , அவரவர் பலம் பெறுகையில் அடுத்தவனை அழித்து என்றுதான் நாம் முழுவதும் அறீந்து வேலை செய்யப் போகிறோம்?

o   உன் அம்மா என்னை  அழகு என்று சொன்னதால் நான் உனக்கு அழகாய்பட்டவள். ஊர் என்னைக் கெட்டிக்காரி என்று சொன்னதால், நான் உனக்கு கெட்டிக்காரியானவள். உனக்கென்று ரசனை இல்லை.உனக்கென்று தனித்த புத்தியில்லை. கூட்டத்தோடு கூட்டமாய் போகிற ஜந்து நீ.

o   வலிக்கிறதா, வலிக்கிறதான்னு கேட்டத்தான் வலிக்கும்.

o   மேலே இருப்பவனை எதிரியாக எண்ணுவது இங்கே ஒரு குலவழக்கம். ஒன்று ஆராதிப்பார்கள். இல்லையேல் அழித்து நொறுக்குவார்கள். பரஸ்பரம் புரிந்து கொண்டு நடப்பது உறவோடு வாழ்வது இவர்களுக்கு புரிவதேயில்லை. மனைவியோ, மானேஜரோ, தலைவரோ, கடவுளோ எல்லாம் இந்த இரண்டு எல்லைகளில்தான் இருப்பார்கள்.

o   சியாமளி, உன் கண்ணுல ஏன் இவ்வளவு அவநம்பிக்கை? வெறும் கனாவோட மட்டும் காலம் தள்ள முடியாதுன்ணு உனக்கு ஏன் புரியலை ? கனா இல்லாத வாழ்க்கையே கிடையாது. கனவு சுகம்தான். சுய நினைவும் வேணும். சுய நினைவோட இருக்கிறபோதுதான் சுகமான கனா சாத்தியமாகும். பைத்தியத்துக்கு நல்ல கனா வராது தெரியுமோ நாம தீர்மானமா ஒரு முடிவுக்கு வரது நல்லது சியாமளி.

o   எந்த எதிர்பார்ப்புமின்றி வடக்கேயிருந்து கமரிமுனை வரை உருவிய வாளோடு விஜயம் செய்த மலிக்காபூர் மாதிரி பெருமாள் முன்னேறிக் கொண்டிருந்தான்.

o   எதனால், எதை நோக்கி, எவ்விதம் என்ற கேள்விகள் இன்றி தேசம், கல்வி, கட்சி, கலை, தனிமனிதர்கள், தலைவர்கள் எல்லோரும் வளர்ந்தார்கள். அதேவிதமாய் “அறிவு”ம் வளர்ந்தான்.

o   உனக்கு என்ன வேணும்னு நீ புரிஞ்சுக்கிற வரைக்கும் உனக்கு வாழ்க்கை நரகம்தான். உன்னைச் சுற்றி இருக்கிறவாளுக்கும் நரகம்தான். உன்னை நீயே ஹிம்சைப்படுத்திக்காதே சியாமளி. ஹிம்சை ஆசை வந்திருச்சுன்னா மீளவே முடியாது. இரண்டு நாள் பொறுமையா இரு. அப்புறம் உன் மனசுல என்ன இருக்கோ அதை வெளிப்படையா சொல்லு. கொஞ்சங்கூட பொய்யில்லாம நேரடியா வா.

o   எட்டணா காசு கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். கிரைண்டிங் வீல் சுவிட்சு பாக்ஸுக்கு வந்தனம் சொல்லும்.

o   சுப்பையா :
சாவறதைவிட ஊர்ல முக்கியமான வேலை. நிறைய இருக்குன்னு தெரியும். தைரியமா இரு. உசிரோட இருக்கறத் ரொம்ப முக்கியம். நல்லவனா இருக்கறது அதைவிட முக்கியம். உனக்கே புரியும்… தம்பி

மாலன் கவிதை :
வீடென்று எதனைச் சொல்வீர்
அது இல்லை எனது வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடி சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றொன்றில்.





No comments:

Post a Comment