பாலகுமாரன் கற்றுக் கொடுத்தவை
இரும்பு குதிரைகள் கற்றுக் கொடுத்தவை
நல்லதோ, கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ, தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் உலகில் ஒரு விலை உண்டு.
துலுக்கரு பூந்த வியபாரம் தோற்றதே கிடையாது. ஏன் சொல்லு, கட்டுமானம். துட்டு வூட்டு உள்ளார சுத்தும். வெளியே போவாது. அப்பா கிட்ட புள்ள கடன் வாங்கும். தேதி சொல்லி திருப்பிக் கொடுக்கும். பொன்னு கட்ட சம்பாதிக்கனும். சம்பாதிக்கிற புள்ளைக்குத்தான் பொண்ணு கிடைக்கும்.
யப்பா !.... தாரிணி இப்பொழுது எழுந்து நின்றால் ?... வெள்ளைப் பாவாடையும், பிரிந்த சட்டையுமாய் எழுந்து நின்றால்…?
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனி மரம்.
வாழ்க்கை
என்பது யுத்தம். எதிர்கொள் என உன் பேயரசன் சொல்கிறான் இந்த யுத்தத்தில் எந்த துக்கமும்
வலியும், அபத்தமும், தோல்வியும், சாஸ்வதம் அல்ல. அழ வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம்..
முதலில் அது இயல்பு, இயற்கை, சுபாவம் என புரிந்து கொள்……
…….
புரிந்து கொள்கிறவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை இதன் இயல்பை புரிந்து கொள்ளாதவன்.
அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம் ? இந்தக் கூறிய முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது
எப்படி? ஜெயிப்பது, முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் புரிவு இல்லாமல் போனால்
இருத்தலே ஹிம்சையாகும். எதிலும் தெளிவற்று எப்போதும் சுலபமின்றி இருக்கற வாழ்க்கை நரகமாகி
விடாதா? தன்னையும் துன்புறுத்திக் கொண்டிருந்தால் ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?
‘நாம
வந்தோம், நாம சொன்னோம்’னு எங்க ஜாதில பேசறதுல தமிழ் தெரியாத பேசறதில்லே. நானும் எனக்குள்ளே
இருக்கிற இறை உணர்வும்னு அர்த்தம். நம்ம மனசு புத்தி கடவுள் இருக்கிற இடம். மனுஷர்கள்
மட்டமே இல்லை. நம்மை நாமே மதிச்சா பிறத்தியாரை அவதூறு பண்ணத் தோணாது. கெட்ட வாசகம்
வாயிலேர்ந்து வராது.
புருஷன் என்பவன் சகல நேரத்திலும் பெண்களுக்கு போதையானவன்தான். இங்கு பெண் சொத்து என்பது சரியில்லை. புருஷன்தான் சொத்து. பிரிக்க முடியாத சொத்து. பெரும் செல்வம்.
எந்த தேசத்தில் ஓர் இளம்பெண் பூரண அலங்காரியாய் இரவு நேரம் பயமின்றி ஆபத்தின்றி நடமாட முடிகிறதோ அதுவே சுபிட்சமான தேசம். அதுவே ராமராஜ்யம். – காந்தியடிகள் சொன்னது. இந்த தேசத்தில் சுபிட்சம் இல்லை. சகலரும் திருடர்கள். வாய்ப்புக் கிடைக்குமானால் அனைவரும் கொள்ளைக்காரர்கள். பிறன்மனை சுகிப்பவர்கள். பிறர் பொருள் கவர்பவர்கள். “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா” நெஞ்சில் ஈரத்தோடு பாடிய பாடலுக்கு வேறு அர்த்தம் கற்பிப்பவர்கள்.
…………பொறுப்பற்ற பொது ஜனம். தனி மனிதனாய் இருக்கிறபோது உண்டான பொறுப்பு, பயம் பொது ஜனமாய் கூடுகையில் சிதறி விடுகிறது.
……கூடல் என்பது பெண்ணோடு மட்டும்தானா? நாலு பேருடன் பேசுவதும், எழுதுவதும் தன் மனசை லட்சம் பேரிடம் வெளியிடுவதும், அதை அவர்கள் அறிந்து கொள்வதும் கூடக் கூடல்தான். நான் தவிப்பது இந்த வெளியிடுதலுக்கா? இந்த அமைதியின்மை, தவிப்பு, அலையல் இது குறித்துத்தானா?.
…… வாழ்க்கையில் முன்னேற பயம் அவசியம். பயத்திற்கு பாதுகாப்பற்ற தன்மை அவசியம். பாதுகாப்பற்ற தன்மைக்கு சிதிலமான குடும்பம் வேண்டும்.
அடிப்படை வசதி உள்ளவன்தான் ரசனையோடு இருக்க உடியும். குழப்ப்பமின்றி யோசிக்க முடியும்.
அலட்சியம் பண்ணுகிறவர்களைத்தான் கட்சியம் பண்ண முடிகிறது.
“கேள்வி கேட்டுக்க ஆரம்பிச்சுட்டே. இனி ஒத்துப் போக முடியாது. தூக்கம் வராது. லோலோன்னு புத்தி பறக்க ஆரம்பிக்கும். சகலமும் தப்பின்னு படும். வெரி குட். படு. படு. அனுபவ்ம் சொல்லித் தரும். நான் சொல்றதை விட உனக்கு உன் அனுபவம் தெளிவு கொடுக்கும்.
மொறைக்கறதை விட முழிக்கறது நல்லதுன்னு சும்மா இருக்கேன்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம். ஒவ்வொரு விதமான வேதனை. உனக்கு உன் வேதனை. எனக்கு என் வேதனை. யாருதான் இங்க நல்லா இருக்காங்க. ஒருத்தர் கூட இல்லை.
……தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதன் விளைவு இன்றைய வாழ்க்கை. வளர்ச்சி.
யோசனை பண்ணியும் வேதனை போகலையே, குழப்பம் தீரலையேன்னு கோபம் வரும். படர்ந்து வரவரக் கொடிக்குத்தான் பிராப்ளம். பாறாங்கல்லுக்குப் பிரச்னை இல்லை. அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் மிருகத்துக்குப் பசிதான் பிரச்னை. நமக்கு ஆயிரம்.
வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு. இடைஞ்சலைத் தாண்டறதுதான் வளர்ச்சி.
என் அனுபவம் என் கதை. என் கதையைப் படிக்க என் அனுபவம் உனக்கும் அனுபவமாற போது என் வயசும், உன் வயசும் சேர்ந்து 30 வயசுக்கு 60 வயசு பக்குவம் வந்துடும். வரலாம் இல்லையா. ஏன் எழுதறேன்னு கேட்டியே அதுக்கு இதுதான் பதில்.
பாறைக்குப் பிச்னை இல்லை. மிருகம் மாதிரி இரை தேடற சுபாவமும் இல்லை. இரையும் தேடி, ஞானமும் தேடி ….. அடடா என்ன சுகம் ! எப்படிப்பட்ட போராட்டம்.
அந்தகரணம் :
தனக்குள் தான் இறங்குதல். பார்வையை உள்பக்கம் புரட்டிப் பார்த்தல். தன்னை அறிதல்.
புஸ்தக அறிவுக்கும், அனுபவ அறிவுக்கும் ஒரு இழை வித்தியாசம் உண்டு.என் அனுபவம் புஸ்தகமா உனக்கு அனுபவமாகனும்னா நீ ரொம்பத் தெளிவா இருக்கணும். குழந்த மாதிரி அபிப்ராயமே இல்லாமே இருக்கணும். குழந்தையா இருக்கறது கஷ்டம்.
எனக்கு இந்த மலையே ஸ்வாமியாப் படறது.காலம் காலமாய் தொங்கிண்டிருக்கிற பாறையைப் பார்க்கிற போது ஹான்னு இருக்கு. அந்தப் பாறை எதிர்க்க நான், என் முயற்சி, வியக்தி ஒண்ணுமேயில்லையின்னு படறது. காலம் காலமா நிற்கிற காரியம் பண்ண மாட்டாமோன்னு ஆரதங்கம் வரது. ஆபிஸ்ல வேலை பண்ணி பொண்களுக்கு கல்யாணம் பண்ணி … இதை எல்லோரும்தான் பண்றா… இஹையே பண்ணனுமான்னு படறது.
யானைக் கழுத்தில் உட்கார்ந்திருப்பது கம்பீரமாய் சுகமாய் கீழே இருப்பவனுக்குப் படும். ஆனால் உட்காருகிறவனுக்கல்லவா தெரியும் அந்த வேதனை. அந்த பயம்.. ஆபிஸ் என்பது சம்பளம், போனஸ், கார் வசதி மட்டுமில்லை தாரிணி. அது யானை. கம்ப மத யானை. அந்த மிருகத்தின் ஒவ்வொரு அசைவும் உட்காருகிறவனை பயம் காட்டும். பிரியமில்லாமல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிற வேதனை புரிந்தவனுக்கு நரகம். வேஷமே வாழ்க்கையாகி விட்டால்…. என் கால்களும் பூமியில்தான் இருக்கின்றன தாரிணி. நான் கொஞ்சம் உயரம். என் பார்வையின் தொலைவு அதிகம். என் உயரம் உன்னை உதாசீனப்படுத்துவ்தற்கல்ல. என் பார்வைக்குள் நீயும் இருக்கிறாய் மனைவியே.
ஐயன்மீர்…. காதல் என்பது என்ன… காதல் என்பது ஆக்ரமித்தலா… அடி பணிவதா.… கவர்ந்து போவதா…விலைப் பொருளா… பண்ட மாற்றா…நம் இதைப் பற்றித் தெளிவாய் யோசிக்கத் துவங்குவோம். காதல் என்பது விட்டுக் கொடுத்தல்., எந்த எதிர்பார்ப்புமின்றி இயல்பாய் நேசித்தல்.
கூடல் என்பது சிலர் சொல்வது போல் அசிங்கமும் இல்லை. பலர் கொண்டாடுவது போல் ஆரவாரமும் இல்லை. அது அமைதியான விஷயம். தலையாய காரியம். கவிதை மாதிரி கவனமான சமாச்சாரம்.
உறவு என்பது சடங்கால் வருவதில்லை.அது ஒரு உணர்வு. உணர்வு வர வேண்டும் என்பதற்கான கருவிதான் சடங்கே ஒழிய கருவியே உணர்வாகாது…………
……. புருஷனும், மனைவியும் முற்றிலும் கலத்தல் என்பது இல்லை. அதே நேரம் மனைவியல்லாது புருஷனுக்குப் பெருமை இல்லை. புருஷனில்லாது மனைவிக்கும் புகலிடம் இல்லை.பரமாத்மா புருஷன். ஜீவாத்மா மனைவி. இதுவே த்வைதம். இரண்டானது. வெவ்வேறானது. வெவ்வேறாயினும் விலக முடியாதது.விலகல் இல்லாதது.
நடிக்க நடிக்க சுயம் மறந்து போகும்.தான் எது, நடிப்பு எதுன்னு தனக்கே தெரியாது போகும்.
So உங்க காதல், கடமை நெறியெல்லாம் மனைவி கற்போட இருக்கணும்னுதான் அவ யார்கிட்டேயும் போயிடுவாளேங்கிற பயம்தான் உங்களைக் கட்டிப் போட்டிருக்கு. இங்கு நிறைய பேர் கற்போட இருக்கற காரணம் பொண்டாட்டிதான்.
…. உன் நிஜமான கவலை இவா யாருக்கும் கிடையாது.எதிர்காலம் பற்றியெல்லாம் யோசிக்கத் தெரியாது.வாழைப்பழம் தின்னுட்டுத் தெருவுல தோலைப் ஓட்டுபோறவந்தானம்மா இவாள்ளாம். அடுத்த தலைமுறைக்கு ஒரு மரம் கூட நடாத மனுஷர்கள், ஒரு புஸ்தகம் கூடப் பொடாத ஜனங்கள். உன் வேலை சிரிப்பாயிடும் காயத்ரி.
… உன் வாழ்க்கை உன்னுடையது காயத்ரி. உனக்குப் பறக்க நம்பிக்கை இருப்பின், வலுவு இருப்பின், பற பற மேலே மேலே. அப்படி புடியாது சிறகு முறிந்து விழுந்தால் தெரியப்படுத்து, காய்த்ரி நான் வருவேன். இதம் சொல்லுவேன். நான் வளர்ந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அப்படியிருக்க அவ்விதமே நீ வளர வேண்டும் அன்று கட்டாயப்படுத்த முடியாது. போய் வா காயத்ரி.. போய் வா…
கஷ்டம், சந்தோஷம் கை போடற வட்டம் வரைக்கும்தான், கண்ணுப் பார்க்குற வரைக்கும்தான். எந்திரிச்சு தொலவுல பார்த்தா அங்க இருளோன்னு இருக்கும். அங்கிருந்து இங்க பார்த்தா இங்கே இருளோன்னு இருக்கும். எல்லா இடத்துலயும் இருளும் இருக்கும், வெளிச்சமும் இருக்கும். வெளிச்சத்துக்குத் தகுந்தாப்புல கன்ணைக் கசக்கிக்கறதும், இருட்டுக்குத் தகுந்தாப்புல பாகுஇப் பார்க்கறதும்தான் நல்லது. நான் கஷ்டப்படறதா நீ நினைச்சுக்கறதும், நீ கஷ்டப்படறதா நான் நினைச்சுக்கறதும் தொலைவாப் பாத்துத்தான். எல்லாரும் இங்க நல்லாத்தான் இருக்காங்க. அவங்க அவங்க கஷ்டம். அவங்கவங்க சந்தோஷம்னு இருக்காங்க. நீ எல்லாத்துலயும் போட்டுப் பொரட்டிக்கற. புரியாத முழிக்கிறே.. ஒனக்கு ஒன்னோட கஷ்டமும் தெரியலை. ஊரார் சுகமும் புரியலை., போவட்டும் விடு. இன்னிக்கு என் கூட இருந்துட்டுப் போ.
புயல் வந்த போது புயலோடு வாழுங்கள்.
புயலற்ற போது அமைதியை அனுமதியுங்கள்.
புயலோடு உண்டான போராட்டமே வாழ்க்கை என்றோ, அமைதியே உலகம் என்றோ கனவு காணாதீர்கள்.
அமைதியான நேரத்தில் புயல் கவலையும், புயல் நேரத்தில் அமைதி பற்றிய கனவும் உங்களைச் சிக்கலாக்கி விடுகிறது. அந்தந்த நேரத்தின் இயல்பே உலகத்து இயல்பு. உங்கள் இயல்பு, இயல்பாய் இருத்தல், சும்மா இருத்தல் (JUST BE)
“கவிதை
எழுதறது, கதை எழுதறது அல்லாம் உலக அக்கறையினால் வர்றதில்லைம்மா. நெறையப் பேருக்கு தான்
பேருக்கு முன்னாடி வ்றும் இனிஷியல் போறலை. ஒரு டைட்டில் வேணும். ‘அதோ பார்’ன்னு அடையாளம்
காட்டணும். கவிஞர், கதைஞர்னு வச்சுக்கிற மாதிரி யாராவது எழுதினதைப் படிச்சுட்டுத் தானும்
எழுத ஆசைப்படறா”
“நாம
குத்துப்படறப்பத்தான் நோவுது. அடுத்தவங்களை மிதிக்கிறப்போ தெரியலை”
“அது
வாஸ்தவம்”
என்ன
அது வாஸ்தவம்?”
“இது
நேத்து வரைக்கும் தெரியலை. இன்னிக்குப் புரிஞ்சுப் போச்சு. அடுத்தவன் புத்தி பத்தி,
வாழ்க்கை பத்தி அசிங்கமாப் பேச யாருக்கும் யோக்கியதை இல்லை. அப்படிப் பேசினா – அது
அலட்டிக்கிறது தவிர வேறொண்ணும் இல்லை”


No comments:
Post a Comment