பாலகுமாரன் பக்கங்கள் 5
நிலாக்கால மேகம் - கற்றுக் கொடுத்தவை
……. உபசரித்தான்.
தால்மாவின் நன்மதிப்பு பெற தவித்தான். எந்தப் பெண்ணுக்கும் இந்த உபசரணைகள் பிடிப்பதில்லை
என்பது நிறைய ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களைக் கவர்வதில் முதல் வழி, கண்டு கொள்ளாமலிருப்பது.
அவள் அழகைக் கண்டு வாய் பிளக்காமலிருப்பது. எல்லா நேரங்களிலும் அனைதியோடு பேசுவது.
தடுமாறுகிறவனை எந்தப் பெண்ணும் மதிப்பதில்லை
எதை விதைக்கிறோமோ அதுவே வளரும். எதைக்
கொடுக்கிறோமோ அதுவே வழங்கப்படும்.
…… “ அந்நியப்
புருஷாளை வெறும எனக்குப் பாக்கிறதுக்குக் கூட
பயம்” என்பதாய் அவள் பார்வை சொல்லிற்று. ஆனால் என்னப் பார்ப்பதற்காகத்தான் அவள் வந்தாள்
என்பதும் தெரிந்து போயிற்று.
நான் என்
கண்களை தொலை தூரத்தில் விரித்தேன். யாரை வேண்டுவது, என்னவென்று வேண்டுவது?. எனக்கும்
ஒரு நாள் மரணம் வரும். இந்த மரணம் நிச்சயமெனில், வேண்டுவதும், வேண்டாததுமென்ன? சொல்லிக் கொடுத்தவனே தகப்பன் எனில் இது என் தகப்பனில்லை.எனக்குப் பல தகப்பன்கள். என் தாயின் பேர் கூடத் தெரியாத பல
தகப்பன்கள். என் தாயின் வயிற்றில் என்னைச் செலுத்தியவனே என் தகப்பன் எனில் அது என்
தாய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நான் அறியவே முடியாத விஷயம். நான் அறியாத விஷயத்தை
அறிந்த விஷயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி நினைப்பவர்களுக்கு தகப்பன் என்பதே கிடையாது.
எனக்கு நானே தகப்பன். எனக்கு நானே பிள்ளை. நான் எழுந்தேன் அந்தப் பிரேதத்தின் கண்களை
விரல்களால் வருடி மூடினேன்.
அழுவதும்,
சிரிப்பதும் மனிதனின் அடிப்படை உரிமைகள்.எதற்கு எந்நேரம் எவ்விதம் என்றெல்லாம் அங்கே
கேள்விகளே இல்லை. பிறரின் சிரிப்பையோ, அழுகையையோ நான் தடுப்பதேயில்லை. அழுது முடிந்த
பிறகுதான் சமாதானம் செய்ய ஆசை வருமேயொழிய, ஒருவர் அழுவதற்கு நான் இடைஞ்சல் செய்ததேயில்லை.
“….. இருந்தேன், கல்லு
பெயர்ந்த சுவர் மாதிரி”
“புரியலியேம்மா”
“சுவரு சுத்தமா இருக்கணும்.
பூச்சு வுதுந்து செங்கல் தெரிஞ்சா நோண்ட ஆரம்பிப்பானுங்க, சந்துல கால் வச்சு படிக்கட்டா
ஏறத் தோணும். மனுஷாள் கால் வச்சு ஏறி ஏறி சுத்திப் போறத விட, சுவருல கால் வச்சு ஏறிப்
போறது சுலபமுன்னு தோணும். சுலபமோ, இல்லையோ அப்படி ஏறிப் போறதே ஒரு சொகம்னு தோணும்,
இருந்தேன் கல்லுப் பேர்ந்த சொவராட்டமா..”

No comments:
Post a Comment