தாயுமானவன் – நாவல் கற்றுக் கொடுத்தவை
பாலகுமாரன் பக்கங்கள் 3:
தாயுமானவன் – நாவலிலிருந்து....
பிரச்னைகளையே சந்தித்து சந்தித்துப் பழகியவன் பேசாமல் நகர்வது முடியாத காரியம். பட்டயமும், கவசமும் ஏந்திய போர் வீரன் காவித் துணியுடன் கமண்டலத்துடன் நடப்பது லட்சத்தில் ஒருவருக்குத்தான் முடியும். பளு தூக்கிப் பழகுபவனுக்குப் 'பளுவின் எடை கூடிக் கொண்டே போவதுதான் சந்தோஷம். பிரச்னையே இல்லை என்கிற போதுதான் போராடுபவனுக்கு பயம் வரும்.
கோபப்படுகிறவரிடம் கோபமாய் பேசுவது ஜெயம் தராது. பதறுகிற வரை இடைவெளி கொடுத்து வீழ்த்துவது எளிது.
பசித்த போது உணவு கிடைப்பது பெரிய வரம்.
சொற்களை விட தோற்றமே மக்கள் முதலில் சென்றடைகிறது. ஒருவன் தோற்றம் கண்டே
மக்கள் முதலில் மயங்குகிறார்கள். நம்பிக்கை கொள்கிறார்கள். நெருங்கிப் பேச, உறவாட
வருகிறார்கள்
பேச்சை மிதமாய், கம்பீரமாய், அதட்டலாய் பயன்படுத்த பயன்படுத்த இன்னும் மரியாதை காட்டுகிறார்கள்.
மனசே வாழ்க்கை. எதை நினைக்கிறோமோ
அதுவாக மாறுகிறோம். தொலை நோக்கு உள்ளவனுக்கு துயரமில்லை. வரும் துயரமும் நீடிப்பதில்லை.
அடி விழாத வாழ்க்கை எவருக்குண்டு. வலியிலிருந்து மீள ஆசைப்படுபவனுக்கே வலியைத் துடைத்துக்
கொள்ளத் தெரியும். வலியே சுகமாகிப் போனவனுக்குத்தான், புலம்பலே பேச்சாகிப் போனவனுக்குத்தான்
துயரம் தொடர்கதை. வல்யைத் தாங்கு. அனுபவி, மற வலியை வேண்டாம் என மறுக்க இன்னும் வலிக்கும்.
இனி எனக்கு வலியில்லை……… மனசே வாழ்க்கை.
எந்த மரியாதையும் பொய்.
பயம் தான் மரியாதை.மரியாதைக்கு மகிழ்ந்திடக் கூடாது சரசு.
சுத்தி வந்துக்கிட்டிருந்தா
எந்தக் கவலையுமில்லை.எவனுக்கு வேணா அடிமையா மண்டி போட்டு இருந்திடலாம். மேலமேலன்னு
போறவனுக்கு இடறத்தான் செய்யும்.கை பிடிச்ச பிடி நழுவி ரத்தம் வரும். சறுக்கின இடத்திலேர்ந்து
நகரணும். பல்லைக் கடிச்சுக்கிட்டு ஏறணும் மலையேறி
நிக்கிறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்கு பயப்படக்கூடாது சரசு.
அடுத்த வீட்டு சாப்பாடு,
தெரிஞ்ச சினேகிதி புடவை, கூடப் பிறந்தவள் நகை, தம் பொண்ணின் அழகு இது நாலும் உத்துப்
பார்க்கவும் கூடாது. நமக்கு உறுத்தவும் கூடாது.
வீம்புக்குக் குடிக்கிறவன்தான்
கெட்டவன்.அயோக்கியன். அல்பன், பொம்பளை மேல மரியாதையே இல்லாதவன்
வெட்கம் உடைய வெகுளித்தனம்.
வெகுளியும் மறைய நிர்மலம்.

No comments:
Post a Comment