Saturday, August 17, 2019

தலையணைப் பூக்கள் - கற்றுக் கொடுத்தவை



பாலகுமாரன் பக்கங்கள் 7:

தலையணைப் பூக்கள்கற்றுக் கொடுத்தவை


சுந்தர்ராஜா  நீ கெட்டவனா இரு. நல்லவனா மாறிடலாம்.  மக்கா இருக்காத சுந்தரா! கோழையா இருக்காத !. மக்கா இருக்கறது பாவம் கோழையா இருக்கறது குரூரம். ஆம்பளைக்கு அழகு தைரியம்டா


புருஷன்கிறது ஒரு ருசி. அதுலயும் நல்ல புருஷன் பரம் ருசி.


எல்லா பொம்பளையும் நல்லவ. எல்லா பொம்பளையும் கெட்டவ. அது ஆம்பளைகிட்ட இருக்கு. லைட் அணைச்சா எல்லா ம் ஒரே லட்சணம்தான்.


ப்ரதர் நியாய, அநியாயம் எல்லாம் உனக்கும் எனக்கும்தான். பொம்பளைக்கு இல்லை.  அவ கண்ணடிச்சா அதுக்குப் பேர் காதல். அதே பொத்திக்கிட்டு சுத்தினா கற்பு. ப்ளேட்ட எப்படி வேணா மாத்துவாளுங்க நம்பாதே.


நேசிப்பதை விட நேசிக்கப்படுவது எத்தனை சுகம். எவ்வளவு கர்வம்.


குரு, வழிகாட்டின்னு ஒருத்தரை ஏற்கறதுக்கு முன்னாடி யோசனை பண்ணு. இவர் வேணுமா தேவையா இவர் சரியா, சரியில்லையா எல்லாம் கேட்டுக்கோ. இவர்தான் குருன்னு ஏத்துண்ட பிறகு மனுசுல கூட எதிர்க்காத, விமர்சனம் பண்ணாத.


"போடா கூஸ்... செத்துரும் அது. நானும் பயந்தேன். உன்னை மாதிரி முதல்ல... எத்தனை இணக்கமா ஆயிடுத்து இந்த வீட்டோட. ஒண்ணும் புரியலை உனக்கு. எவ்வளவு படிச்சிருந்தாலும் பொம்மனாட்டி அடி மனசுல பொம்மனாட்டிதான். உனக்குப் புடிச்சது எனக்குப் பிடிக்கும்னு சாதாரணமா விட்டுக் கொடுக்கற ஜென்மம்தான். அவளை ஜெயிக்கறதுக்குப் படிப்பு வேண்டாம். பலம் வேண்டாம். அன்பு போறும். பாராட்டுடா, கை குலுக்கு. அட இது எனக்குத் தெரியலையே எப்படின்னு கேளு... உடனே வெட்கப்பட்டுரும். ஐயோ எனக்குத் தெரியாதுன்னு உட்கார்ந்துடும்."

“மறுபடி சொல்றேன்... மல்லிகாவை உன்னால நெருங்கக்கூட முடியாது. நெருங்கி நிக்கற உன் பொண்டாட்டிய புரிஞ்சுக்க முடியாது. ஏன் தெரியுமா பொம்பளை யாருன்னு உணராம உங்க கற்பனைலயே, உங்க அனுமானத்திலேயே பார்க்கறீங்க. சிரிச்சா டாவடிக்கத் தோண்றது. கை குலுக்கினா ‘கேசோ'ன்றீங்க. வெட்கப்பட்டா படிஞ்சுடும்னு முடிவு கட்டறீங்க. ஜெர்மன்ல பேசினா... ப்ரஞ்ச் எழுதினா... கால் தட்டி மூஞ்சில இடிச்சா... கை பாவாத சம்மர் சால்ட் அடிச்சா... எந்த விஷயம் பத்தியும் தெளிவா பேசினா.. நமக்கெதுக்கு வம்புன்னு ஓடி வந்துடறீங்க. ஏன்...? உங்க கணிப்புல அவ இல்லை. நீ கற்பனை பண்ணின மாதிரி அவ இல்லை. உடனே பயம்... கலவரம். ஜன்னல் வழியா குதிச்சு. தற்கொலை பண்ணிக்கணும்னு புலம்பல். இல்லேன்னா நீ தேவடியான்னு அறையும் காட்டுத்தனம்.


புருஷன் என்பவன் பணத்தாலோ, படிப்பாலோ பெண்ணெதிரே உயர்வதில்லை. தீயிலிருந்து பெண்ணைக் காப்பாற்றுகிற பண்பால் அவளுள் உயர்ந்து நின்றான். அந்த ஒரு துணிச்சலுக்காகத்தான் பாராட்டப்படுகிறான். வணங்கப்படுகிறான். சுந்தராவை மானசீகமாய் நமஸ்கரித்தாள் வேதவல்லி


"மாறவே மாட்டேளா?”

"நீ மாறப் போற பாரு என்னை மாதிரி. எல்லாரையும் எல்லா விதமாகவும் சந்தோஷப்படுத்த முடியாது. பெண்ணே. உன் காரியத்தை நீ ஒழுங்கா செய்தா போறும். அது எல்லோருக்கும் தானா சந்தோஷம் தரும். உன் காரியம் என்ன? புருஷனை சீராட்டறது. அவன் மேல மேல் வளர தட்டிக் கொடுக்கறது. அவன் வந்து இளைப்பாற இடம் கொடுக்கறது. அவன் பொறுப்புக்கு குழந்தைகள் பெத்து தரது.''

“அப்ப என் சந்தோஷம்ங்கறது?"

"இது பண்ண பண்ண சுத்தி சுத்தி வருவான். எந்தப் புருஷனும் தன்னை சுத்தி வர்றதவிட பொண்டாட்டிக்கு சந்தோஷம் உண்டா? அதைவிட கர்வம் உண்டா?" அடித்துப் போட்டாற்போல் அந்தப் பெண் உட்கார்ந்திருந்தது.

"இல்லை நான் சொல்றது..."

"புரியலை உனக்கு நீ பெரிய கலெக்டர். இல்லை டென்னிஸ் பிளேயர். ஆனா உன் புருஷன் உன்னை சுத்தலை. வேற எங்கேயோ சுத்தறான். இப்படி நினைச்சுப் பாரு. நிறைவா இருக்குமா அது. என்ன வேணா செய், எது வேணா உடுத்து. ஒருத்தரை ஒருத்தர் சுத்திண்டுருக்கறது, நின்னு போச்சு. நீ உடுத்தினாலும் ஒண்ணுதான். உடுத்தாட் டாலும் ஒண்ணுதான்."

"புரியறது.''

“மேற்கொண்டு நான் சொல்கிறேன். இப்படி சுத்தறதையோ, கொஞ்சறதையோ மத்தவாளுக்காக செய்யாதே. உனக்காக செய். அவனுக்காக செய். எது பண்ணாலும் 
ஹானஸ்டா செய். தானா அமைதியாயிடும். எது ? செய்யறது, கொஞ்சறது எல்லாம் நிமிர்ந்து ஒரு தடவ பார்த்தா நாலு கொஞ்சல் தெரியும். உன் கல்யாணத்தில் நான் ஒரு கோடி, மங்களம் ஒரு கோடில இருந்தோம். நடராஜு, தாலி கட்டி முடிச்சதும் பளிச்சுனு இவளுக்கு அழுகை வந்துடுத்து. அந்தக் கோடிலேர்ந்து ஒரு பார்வை, கண்ல ஜலம் வழிய பார்த்தா. எனக்கும் கண்ல ஜலம் பொங்கிடுத்து. பதிமூணு வயசுல அஞ்சு குழந்தைகள் பெத்து, ஒண்ணை வாரிக் கொடுத்து, நாலுக்கு கல்யாணம் பண்ணி நானும் மறுபடி நிமிர்ந்து நிக்கறேன்னா அதுக்கு யார் காரணம்? என் கடமை முடிஞ்சுதுன்னு நிம்மதி வர யார் காரணம்? இந்த பொம்மனாட்டியல்லவா? நாப்பத்தாறு வருஷக் குடித்தனத்துக்கு இவள் பொறுப்பில்லையா? இவ இல்லாத இது நடந்திருக்குமோ? இது நாங்க பேசிக்கவே யில்லை. அனிதா பார்த்துண்டோம்"


மாறுதல் இயல்புதானே ! பிறர் மாறுவது மட்டும் ஏன் தவறென்று சொல்கிறார்கள்.
மதம், கடவவுள் நம்பிக்கை இதெல்லாம்  பெரிய சுகம். அருவில குளிக்கற சுகம். மறுபடி அழுக்காகும். குளிக்கத் தோணும். எவ்வளவு குளிச்சாலும் அழுக்குதான். எதுக்கு குளிக்கறதுன்னு இருக்க முடியுமா?



துணை எனக்கு நல்லது கொடுன்னு கேட்க தினம் தினம் (கோயிலுக்கு)  போயிட்டு வந்தா நல்லது. கிடைக்கற போது அது நானா சம்பாதிச்சதுன்னு கர்வம் இல்லாத் இருக்கும்.  கெட்டது வந்தா தினம் கோயிலுக்கு போற பழக்கத்துல அன்னிக்கும் போய் ‘ஏம்மா இந்த சோதனைஎப்ப மீளுவேன் இதுலேர்ந்து’ன்னு ஒரு அழுகை இருக்கும். அப்படி துக்கப்படறதால மனசுல ஒரு அமைதி இருக்கும். தும்பத்தை தாங்கிப்போம். இதுவும் கடவுள் கொடுத்ததுன்னு ஒரு தெம்பு இருக்கும். ப்ரேயர் மனசோட பேசறதுடா



உனக்குப் பின்னே இருக்கிறவாளை  உன்னை விடக் கெட்டிக்காரனா, உன்னை விட வசதியா தயார் பண்றது. அப்பன் குடிச்சு அழிச்சான்னு வேதனைபட விடாத, தெருவுல அலைய விடாத, அவாளை ஒரு ஸ்திதிக்கு கொண்டு வந்து விடறது. அதுதான் ஒரு தலைவன் ட்யூட்டி. இன்னிய தலைமுறையின் சவுக்கியம்தான் போன தலைமுறை லட்சியம். அடுத்த தலைமுறை சுகம்தான் இன்னிய தலைமுறை குறிக்கோள்



“ஏன் நைட்டிக்கு என்ன?”
“தெரியறதே”
“உத்து உத்து பாஅக்கறவாளுக்குத்தான் தெரியும்”


 … நாலு தடவை வெட்கப்பட்டா எந்த ஆம்பளையும் குளோஸ்….

கல்பனா நைட்டிக்கு மாறிக் கொண்டாள். தோள் பக்கம் பிரில் வைத்து புஜம் தெரிய இடுப்பு பக்கம் பெல்ட் வைத்து தழைய நைட்டி இருந்தது. பெல்ட் உருவ, நைட்டி இரண்டாய் பிரியும். சுருக்கு போட்டுக் கொள்ள உடலோடு ஒட்டும்.

“எனக்கு இது நன்னா இருக்கான்னா?"

உடுப்புதான் பெண்களை தேவதை ஆக்குகிறது. நிர்வாணம் அழகேயில்லை.

"சௌகரியமா இருக்கும்னு தோண்றது." சுந்தரா பதில் சொல்லவில்லை.

“பரம சௌகரியம். சுருக்கு பிடிச்சு இழுத்தா பசக்குன்னு அவுந்துடும். நெஞ்சு கூடு கூனி ஜாக்கெட் ஹூக் பிக்க வேண்டாம். ப்ளீஸ் ப்ளீஸ்னு பொண்டாட்டிய கெஞ்ச வேண்டாம்.



உன் காரியத்தை நீ ஒழுங்காச் செய்தா போறும். அது எல்லோருக்கும் தானா சந்தோஷம் தரும்


மத்தவங்க எமோஷனை நாம் வாங்கி அப்படியே பிரதிபலிக்கறதுக்கு நாம முட்டாள்கள் இல்லை. கோவத்துக்கு கோவம், துக்கத்துக்கு துக்கப்படறது சாதரண ஆட்கள் செயல். புத்தியுள்ளவா எதிராளி கோவத்தை புரிஞ்சு நிதானமா நடக்கணும். இது எமோஷனல் நேரம்., யாரோ சொல்லிட்டாளேன்னு துடிக்கறதுக்கு நீ என்ன சின்னக் குழந்தையா, விடலை பெண்ணா?


ஒரு வயசுக்கப்புறம் நாம கனா காண்றதை நிறுத்திடணும். நம்ம சூழ்நிலை, நம்ம யோக்யதை நாம சரியா எடைப் போட்டுக்கணும். கனவு – விடலை சமாச்சாரம். எப்பவும் விடலையா இருக்க முடியாது. இருந்தா கஷ்டம் வரும். இனி என்ன ? யோசனை பண்ணு, போ  


நாம் தூசு சுந்தரா. வெறும் தூசு. இந்தக் காசோ... வீடோ... காரோ... கரையோ எனக்குள்ள ஒட்டலை. நான் அதே கல்லிடைக்குறிச்சி விவசாயி. விதைச்சு அறுத்து தின்னு விதைச்சு...

"அப்பா" சுந்தரா அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“இது நடராஜுக்குத் தெரியலையேன்னு மனக்கஷ்டப் படாதே. உடம்பு உரம், ரத்தம். நான் நான்னு நினை. நினைக்க வைக்கும். ரத்தம் சுண்டினா தசை சுருங்கினா அவன் உலகமே வேற சுந்தரா. ரத்தம் சுண்டறதுக்கு முன்ன தெரிஞ்சுட்டா ஞானம். இது மறந்துடக் கூடாதுன்னுதான் அந்த மாதிரி ஞானிகளைப் போய் பார்க்கறது. உன் கர்வம், நீ எத்தனை அடக்கமா வேஷம் போட்டாலும் உன் கர்வம் அது கண்ணுக்குத் தெரியும். உச்சி மண்டைல அடிச்சாப்ல ஒரு வார்த்தை சொல்லும். சொல்ல அவளுக்குத் தெரியும். மடம் எதுக்குன்னு கேட்கறானா நட்ராஜ்... வீடு முழுக்க ஒரே சமையலறையா இருந்தா நன்னா இருக்கும... மெத்து மெத்துன்னு கட்டில் போட்டு, ஏசி போட்டு படுக்கை அறை வேண்டியிருக்கோன்னோ, அப்பாடான்னு உழைச்சு களைச்சு வரபோது வசதியா இடம் வேண்டி ருக்குமோன்னோ... அப்படி மனசு படுக்கற அறை மடம்...


எனக்கு சொல் தாங்காதும்மா” கல்பனா முகம் தூக்கிக் கொண்டாள்.

"வார்த்தைக்கெல்லாம் பயப்படக் கூடாது. வாயிருக்கு பேசறோம். கொன்னுடுவேன்னு ஒரு அம்மா சொன்னா குழந்தையை கொன்னுடுவாளா? அப்பத்திய மனநிலை. என் தங்கமேன்னு சொல்லுவா மறுநிமிஷம். அது ஒரு மன நிலை."

"முனிவர்கள் வாழ்கன்னு சொல்றா மாதிரி, நாயாப் போன்னு சாபம் கொடுக்கறா மாதிரி. முனிவர்களா இருக்க லாமே தவிர சன்யாசியாயிடக் கூடாது. இனிமே பேச்சே யில்லை. யார்கூடயும் போயிடக்கூடாது. அப்பா நான் கரக்ட்டா." அனிதா கேட்க கல்பனா சமையலறைக்குள் ஓடிவிட்டாள்.


“கிராமத்துல போய் தங்க முடியாது. காசு உள்ளவன்னு தெரிஞ்சா ஹான்னு பார்க்கறான். என் பிள்ளை படிப்பு செலவு ஏத்துக்கோயேன். உங்கிட்ட காசு இருக்கேங்கறான். பிள்ளை படிப்புக்கு தரலாம். அப்பனை அது தத்தாரியாக்கறது. நகை கடன் கேக்கறாங்க சார். கல்யாணத்துக்கு போட்டுண்டு போய் வந்து தராளாம். மாட்டேன்னா உங்கிட்டதான் இருக்கே கொடுத்தா என்ன... புரியவேயில்லை அந்த சைகாலஜி. மெட்ராஸ் அப்படியில்லை. நாம உண்டு நம்ம வேலை உண்டு. அதே சமயம் மனுஷா சிநேகிதமாவும் இருக்கா. ”






No comments:

Post a Comment