பாலகுமாரன் பக்கங்கள் 9:
பந்தயப் புறா – கற்றுக் கொடுத்தவை
எல்லா ஆண்களுக்கும்
சிவசு இருக்கிறான். நூற்றுக்குத் தொண்ணூறு ஆண்கள் நல்லவர்கள்தான் செல்வி, அவர்களை உணர
பெண்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. வெளிப்படுத்த ஆணுக்கு வாய்ப்பு இல்லை. நம் தேச ஆணுக்கும்,
பெண்ணுக்கும் இடையே பெரிய ஐஸ் கட்டி காலம் காலமாய் இருக்கிறது. இது உடைபட வேண்டும்.
உடைக்க முயற்சிக்க வேண்டும்.
ஆனால் யாரும்
அணைத்துக் கொள்ள மாட்டார்கள் ‘நானிருக்கிறேன்’ எங்கிற உறவு எவருக்கும் கிட்டாது. கிட்டினாலும்
நிரந்தரமல்ல. அண்ணனுக்கு அழுகை வந்தது, அழுதான். கோபம் வந்தது, அடித்தான். எல்லா உறவுகளும்
அவரவர் மனநிலைக்கு ஏற்றபடிதான் நடப்பார்களே ஒழிய, எதிராளி மனமறிந்து ‘உனக்கு என்ன தேவை’
என்று கேட்டு நடப்பதில்லை. அப்படி கேட்கக் கூடிய ஒரு சூழ்நிலை அமைய வேண்டும். எனவே எதிர்பார்க்காதே. – உன்னை நீயே அணைத்துக் கொள். உன்னிடம் நீயே
பேசு. உனக்கு நீயே உரமேற்று. எதிர்பார்த்து ஏங்கி இல்லையென்று புழுங்கிச் சாவதை விடேதுவாயினும்
அசையாது இருக்கப் பழகு.
எல்லாரும் நல்லவங்க. எல்லாரும் கெட்டவங்க
நல்லதும், கெட்டதும் சூழ்நிலை. அப்பத்திய மூட் பொறுத்தது இது.
ஜெயித்தலோடு
எந்த யுத்தமும் முடிவதேயில்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகி விடுகிறது. எதிரி
மூர்க்கமாகிறான். கூர்மையாகைறான். பலப்பரிட்சை முடிந்து போய்ப் பழி வாங்குதல் வந்து
விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போலிருக்கிறது. தோல்வியை விட வெற்றிதான்
பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.
யாராவது
இப்போது அருகே வந்து அணைத்து, இறுக்கி ஆறுதல் சொல்லக் கூடாதா என்று ஏக்கம் பொங்கிற்று.


No comments:
Post a Comment