பாலகுமாரன் பக்கங்கள் 13:
பயணிகள் கவனிக்கவும் – கற்றுக் கொடுத்தவை
அதிகாரம்
பண்ண ஆணவம் வேணும். ஆணவம் எப்போ வரும்? அவமானம் துச்சமாப் போறபோது வரும். அவமானம் பட்டு
பட்டுத் தழும்பேறினவன் அதிகாரம் பண்ண முடியும். அரசாங்கத்துல இன்னிக்கி பிரபலமா இருக்கிறவா
யாரு? ….நிறைய அவமனப்பட்டவா
மரத்துல கொடிய படர்ந்து ஒட்டுண்ணி மரத்துத்தண்டை உறிஞ்சி
வள்ர்றது.. வளர்ந்து எங்கே போகும். அங்கேயே மரத்தடியிலேயே பிராணனை விடும். மரத்துக்கே
உப்யோகமாகும். எது உறிஞ்சுதோ அதுவே உபயோகம்.
ஆசைப்படு. ஆசைப்படறதிலே தப்பில்லை. ஆசைப்படறதுக்கான
யோக்கியதையை வளர்த்துக்கோ. எதுக்கு யோக்கியதையோ
அதுக்கு ஆசைப்படு. யோக்கியதைக்கு மீறின ஆசைக்குப் பேராசைன்னு பேரு. பேராசை பெரு நஷ்டம்.
தீராத உபத்திரவம்
”அவருக்குத்
தெரியும். உனக்கு எது, எப்போ, எவ்வளவு தரணும்னு
தருவார் , தூங்கிடு”
“அதாவது…”
“கேட்டுட்டு
மறந்துடு. எனக்குத் தெரியும்”
“அடடா…!
அப்போ பிரேயர்னு நச்சரிப்புக் கூடாதுங்கறிங்களா?”
“ஆமா,
நம்பிக்கை வேணும் அவசியம் தன்னை ஒப்படைத்தல். அவர் இருக்கிறார் என்கிற உணர்வோடு வாழ்தல்”
என்னால்
முடியாது என்கிற நினவின் விளைவுதானே இறை நம்பிக்கை. நான் பலவீனன் என்கிற நிலை புரியும்போதுதானே
கடவுள் வழிபாடு.
…மனதை யத்தனம் முடியாது என்கிற போது கடவுளை நினை. கடவுள் என்பது நம்பிக்கை சத்தி. நான் நலமாவேன்
என்கிற நம்பிக்கை இந்த நம்பிக்கைக்கு எது ஆதாரம்? நலமானவர்தானே ஆதாரம் ? நலமானவர் யார்?
தெளிவோடு இருப்பவர். அவர் பேச்சுதான் தூது., இறை வாக்கு.
சத்தி!
வாழ்வின் கடமைகளினின்றும் நழுவாது, அந்தக் கடமைகளில் ஈடுபடும்போதே அதற்கும்
மேலான தேடலோடு இருப்பது…. கடமைகளை செய்யாதிருத்தல் வாழ்க்கையில்லை, அதே நேரம் கடமைகள்
மட்ட்மே வாழ்க்கையில்லை. தேடல்தான் வாழ்க்கை.
தேடல் என்பது நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது.
அந்த நம்பிக்கையே இறை வெளிச்சம். வெற்று நம்பிக்கையா கடவுள் என்ற கேள்வி வரும். என்ன
ஆதாரம் என்று புத்தி கேட்கும். நானே என்று சொல்கிறாய் தெளிந்தவர். எல்லாக் கேள்விகளுக்கும்
பதில் சொல்கிறார்.
“சாப்பாட்டுக்கு
கஷ்டப்படலியா?”
எங்கனா கிடைச்சுடுதுங்க
சாப்பாடு. பட்டினில செத்துட மாட்டோம். யாருனா எதுனா செய்வாங்க”
“பிச்சையெடுப்பியா?”
“வேற வழியே இல்லேன்னா
அதுவும் செய்யலா. வூட்ல அம்மா கம்மஞ்சோறு வெச்சா ஏன் அரிசிச் சாறு போட மாட்டீங்களாக்கும்னு
தூக்கி வாசல்ல போட்டிருக்கேன்.பிச்சையெடுக்கறபோது கம்மஞ்சோறு ஞாபகம் வரும். கம்மஞ்சோறு
சாப்பிடறப்பல்லாம் பிச்சையெடுத்தது ஞாபகம் வரும். தூக்கி எறிவேனா , சொல்லுங்க.”
“வயசுக்கு மிஞ்சின
புத்தி”
“இல்லீங்க. கஷ்டப்படாத
வளர்ந்துட்டம்னு வெச்சிக்குங்க. சின்னச்சின்ன விஷயம்கூடப் புரட்டிப் போட்டுடும். ஒண்ணு
மாத்தி ஒண்ணு அடி வாங்கினா உலக்கை தலை மேல நின்னாக் கூட தப்பிச்சுக்கறது எப்படின்னுதான்
புத்தி போடும். அதுக்குத்தான் வெளியே ஓடி வந்துடறது… நாலு பேர் பாக்கறது”
பெண்ணைக் கடவுளென்று கொண்டாட முதன்முதலில்
எவனுக்குத் தோன்றியது? எந்த நேரத்தில் தோன்றியது? ஏன் தோன்றியது?.........
……. நெஞ்சு
வேதனையில் தளும்பி நிற்க, பிழிந்து போட்ட வேதனையில் மனசு தவிக்க, வாய் திறந்து பேச
முடியாது, செயலாற்ற முடியாது. தவிக்கிற போது சொல் என்னிடம், உன் மனசு சொல் என்று முகவாய்
தாங்கின போது பெண் கடவுளாயிருக்கிறாள்.
சாமர்த்தியங்களை
விட ஒரு மனிதனை சந்தர்ப்பங்களே உயர்வாகவோ, தாழ்வாகவோ மாற்றுகின்றன. சந்தர்ப்பத்துக்கு
ஜாதி வித்தியாசம் இல்லை அப்பா. அது சகலருக்கும் பொது. அரசனை ஆண்டியாக்கும், ஆண்டியை
அரசனாக்கும். அது பிராமணனை வீரனாக்கும். வீரனை வேதியனாக்கும்.
வெற்றி பெற்றவன் வீரன். அப்போது தோல்வியடைந்தவன்
யார்? எவர் தோல்வியை முகம் மலர ஏற்றுக் கொள்கிறானோ அவனும் வீரன்தான். ……அப்பா வீரம்
என்பதற்குப் பெண் ஆவேசமல்ல. நிதானம், துவண்டு போகாத நிதானம், குதித்து களிக்காத நிதானம்.
“ஆம்பளை
கெஞ்சினா ஒரு கிக்குதான் எல்லா பொம்பளைக்கும்”
காதல் யோசிப்பில் பெண்ணிடம் விரைவு அதிகம்.
அங்கு மேனி மயக்கம் தாண்டி எதிர்கால விளைவு பற்றி யோசனையே வந்து விடும். ஆண் இதற்கு
நேர் எதிர். உடம்பு மயக்கம் மீற அவனுக்கு நாளாகும். உடம்பு மயக்கம் இருக்கும்வரை எல்லா
பேசும் குழப்பமாய்த்தான் இருக்கும்.
பெண்ணுக்கு
புருஷன் என்பது வெறும் உடம்பல்ல சத்தி. ஔருஷன் ஒரு உணர்வு. தோளில் தலை சாய்த்து ‘அப்பாடா’
என்கிற கண் மூடும் உணர்வு. என்னைக் காக்க ஆளுண்டு என்கிற நிம்மதி. என்னைப் பற்றிக் கவலைப்பட ஒரு
ஜீவன் உண்டு என்கிற சந்தோஷம். நான் தனியில்லை என்கிற குதூகலம்.
‘ரொட்டி
மட்டும் வாழ்க்கையில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு சத்தி. அது போல இன்னொன்று தோன்றுகிறது.
உடலின்பம் மட்டுமே காதல் இல்லை. காதல் என்பது சிநேகம். ஆழ்ந்த அன்பு. அன்பில் விளைந்த
அக்கறை. அக்கறை காட்டும் பரிவு. பரிவு தரும் உற்சாகம். உற்சாகத்தில் வளரும் தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கை தரும் அமைதி. வாழ்க்கைக்கு ரொட்டி முக்கியம் சத்தி. காதலில் அது ஒரு சுகம்.
பெண் துணிந்தால் இந்த உலகம் தூசுக்கு சமம்.
அவள் ஆணுக்கும் துணிவூட்ட…பிரபஞ்சம் மொத்தமும் அவர்கள் வசப்படும்.
“
“…..எல்லாத்தையும் விட…”
“உம்”
“உன் இளமை. உனக்கு நாற்பது
வயசாயிருந்தா உன்னை லவ் பண்ணியிருப்பேனா? இது பேச நல்லாயிருக்காது. ஆனா இதுவும் உண்மை.
யூ ஆர் யங். அற்றாக்டிவ். நீ தொட்டுத் தள்ளனும்னுதானே வம்பு. பண்ணினேன் பீச்சுல. கிட்ட
உட்கார்ந்து முகத்தை அழுத்தினப்போ உலகத்துல எல்லாரும் காணாமப் போயிடணும். உன்னையும்
என்னையும் தவிரனு தோணிச்சு”
“ஜார்ஜினா !”
“எட்டாங்கிளாஸ் பொண்ணு மாதிரி பேசறனா?”
“அதென்னமோ லவ்வுல மட்டும் எல்லாப் பொண்ணுங்களும் எட்டாங்கிளாஸ்
நடவடிக்கைதான்”
“அழகுன்றது மனசுதான் ஜார்ஜினா.
என்னைப் பொறுத்தவரை நீ உலக மகா அழகி. பேரழகி”
“உன்னைப்
பாராட்டணும்”
“நான்
அதுக்கு எழுதலை. பாராட்டு வாங்கறது சுலபம். கையூனி பத்துக் கரணம் போட்டா கை தட்டுவாங்க.
சினிமால அதானே பண்றான். ஜனங்க பிளாக்ல டிக்கட் வாங்குதே”
“பிறகு
எதுக்குடா எழுதினே?”
“நான்
என்னோட பேசறதுக்கு”
“ஏன்
பெசணும்?”
“என்னை
நல்லவனாக்கிக்கற்துக்கு”
சந்தோஷம் உள்ளவர்களால்தான்
சந்தோஷம் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இது புரிந்தவர்கள் பாக்கியவான்கள்
“ஒரு மதம் எப்போ வெறியாகுது
தெரியுமா தம்பி. அது பொறுக்கப்படுகிறபோது. அது தடுக்கப்படுகிறபோது”
கற்றுக் கொடுத்துக் கடவுள்
தன்மை வரும்னா, உலக்த்துல நிறைய ஆள் கடவுளாயிட்டிருப்பான். மூணு தலைமுறைக்கு முன்னாடி
கிறிஸ்தவரானவங்க. நாலாம் தலைமுறையில இந்து ஆகக் கூடாதா? இடது போனா சரி, வலது போனா தப்பா?
அன்னையும், பிதாவும் முன்னெறி
தெய்வம்.. அம்மாதான் கடவுள். எல்லா மதத்திலேயும், எல்லா தேசத்திலேயும். ஏன்? எதனால்?
அவளுடைய கருப்பையை விட சந்தோஷமான இடம் எதுவுமே இல்லை இந்த உலகத்துல.
“….நாளைக்கு உனக்கும் அவனுக்கும்
பிணக்கு வந்தா அதைப் பசங்க சிரிபு தீர்க்கும். பெத்தது கஷ்டப்படும்மேனு பிரியாது இருக்கத்
தோணும். ஊர்ல நூற்றுக்குத் தொண்ணூறு குடித்தனம் குழந்தைகளால ஒத்துமையா இருக்கு.”
……………..
……………..
இங்கிருப்பது அங்கு இல்லை
அங்கிருப்பது இங்கு இல்லை
இல்லை என்பதெங்கு என்று
என் மனசு தெடும்…
இல்லாததைக் தேடுவதில்
கெட்ட சுகம் காணும் !
தேடலது என்னவென்று
இன்று கண்டு கொண்டேன்….
தேடுவதை விட்டு விட்டுத்
தேடலாக நின்றேன்

No comments:
Post a Comment