பாலகுமாரன் பக்கங்கள் 11:
பச்சை வயல் மனது – கற்றுக் கொடுத்தவை
எனக்குள்ளேயும்
எப்போதாவது
இடி விழுந்து
மழை பெய்யும்
மண் நனைந்து
மனம் விசும்
போ மலரும்
நாற்றங்கால் தலை சிலுப்பும்
வண்ணத்துப்
பூச்சி படபடக்கும்
மண்புழு
நகர்ந்து நகர்ந்து
உயிர் கிளறும்
இது வசந்தம்தான்.
இயற்கைதான்
வரவேற்றுப்
பாடதான் கவியில்லை
கவிஞனுக்காக்ய்
வசந்தம் காத்திருக்குமா..?
காற்று மெல்ல
வசந்தத்தைக்
கடத்திக்
கொண்டு போகும்
சருகுகள்
தரையிறங்கி
பூமி வெடிப்பில்
சிக்கிக் கொண்ட
மண் புழுவை
மெல்ல மெல்ல மூடும்.
“யாரும் ஒலகத்துல மோசமில்லை. சூழ்நிலைதான் காரணம்.
சூழ்நிலையைத் தாண்டி உறுதியா நிக்க எல்லாருக்கும் முடியாதுங்க.”
“வேதனைப்பட்டவர்களுக்கு வேதனையின் வலி தெரியும்னு
யோசிக்கிறேன்”
பயம்தாங்க பொய்க்கு அடிப்படை…….
…….ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் அதனாலேயே நம்ம
தேசத்து திருமணம் எல்லாம் அசிங்கமாயிடுச்சு. இன்னும் எத்தனை பொய் இருக்குமோன்னு சந்தேகம்
வருது. பயம் மேலும் பொய் சேர்க்குது. கற்பு மட்டும் உயர்ந்த குணம் இல்லீங்க. உண்மையா
இருக்கறது, கோவம் இல்லாம இருக்கறது. இதுதான் நல்ல குணம்….”
“பாதிப்புக்கு
பதில் பாதிப்பு வாழ்க்கையாயிடக் கூடாது”
….. போர் செய்து ஜெயிச்சுட்டா பிரச்னை
தீருங்களா? புரிஞ்சுக்கறதுதான் தீர்வு. அதுக்கு ஒரு நிதானம் வேணும். நிதானத்துக்கு
வர மன அமைதி காரணம். மன அமைதிக்கு கான்ஷியஸ்னஸ் அடிப்படை. கான்ஷியஸோட இருக்கறதுதாங்க
வாழ்க்கை. எது செய்தாலும் என்ன செய்யறோம்னு நாலு பக்கமும் யோசிச்சுப் பாக்கறதுதான்
வாழ்க்கை. கோபமா இருக்கறதுதான், சொன்ன எல்லாத்துகும் எதிரி. அது குழப்பம்தான் கொடுக்கும்.
கவிதைங்கறது
ஒரு நல்ல அனுபவம். எல்லா நல்ல அனுபவமும் எழுதினாலும், எழுதாட்டாலும் கவிதைதான். நல்ல
கவிதைக்கு. ஒருத்தர் காத்திருக்கணும்.

No comments:
Post a Comment