Saturday, August 24, 2019

பயணிகள் கவனிக்கவும் – கற்றுக் கொடுத்தவை



பாலகுமாரன் பக்கங்கள் 13:

பயணிகள் கவனிக்கவும்கற்றுக் கொடுத்தவை


அதிகாரம் பண்ண ஆணவம் வேணும். ஆணவம் எப்போ வரும்? அவமானம் துச்சமாப் போறபோது வரும். அவமானம் பட்டு பட்டுத் தழும்பேறினவன் அதிகாரம் பண்ண முடியும். அரசாங்கத்துல இன்னிக்கி பிரபலமா இருக்கிறவா யாரு? ….நிறைய அவமனப்பட்டவா



மரத்துல கொடிய படர்ந்து ஒட்டுண்ணி மரத்துத்தண்டை உறிஞ்சி வள்ர்றது.. வளர்ந்து எங்கே போகும். அங்கேயே மரத்தடியிலேயே பிராணனை விடும். மரத்துக்கே உப்யோகமாகும்.  எது உறிஞ்சுதோ அதுவே உபயோகம்.




ஆசைப்படு. ஆசைப்படறதிலே தப்பில்லை. ஆசைப்படறதுக்கான யோக்கியதையை வளர்த்துக்கோ.  எதுக்கு யோக்கியதையோ அதுக்கு ஆசைப்படு. யோக்கியதைக்கு மீறின ஆசைக்குப் பேராசைன்னு பேரு. பேராசை பெரு நஷ்டம். தீராத உபத்திரவம்




”அவருக்குத் தெரியும். உனக்கு எது, எப்போ, எவ்வளவு தரணும்னு  தருவார் , தூங்கிடு”
“அதாவது…”
“கேட்டுட்டு மறந்துடு. எனக்குத் தெரியும்”
“அடடா…! அப்போ பிரேயர்னு நச்சரிப்புக் கூடாதுங்கறிங்களா?”
“ஆமா, நம்பிக்கை வேணும் அவசியம் தன்னை ஒப்படைத்தல். அவர் இருக்கிறார் என்கிற உணர்வோடு வாழ்தல்”
என்னால் முடியாது என்கிற நினவின் விளைவுதானே இறை நம்பிக்கை. நான் பலவீனன் என்கிற நிலை புரியும்போதுதானே கடவுள் வழிபாடு.

…மனதை யத்தனம் முடியாது என்கிற போது கடவுளை நினை. கடவுள் என்பது நம்பிக்கை சத்தி. நான் நலமாவேன் என்கிற நம்பிக்கை இந்த நம்பிக்கைக்கு எது ஆதாரம்? நலமானவர்தானே ஆதாரம் ? நலமானவர் யார்? தெளிவோடு இருப்பவர். அவர் பேச்சுதான் தூது., இறை வாக்கு.     




 சத்தி!  வாழ்வின் கடமைகளினின்றும் நழுவாது, அந்தக் கடமைகளில் ஈடுபடும்போதே அதற்கும் மேலான தேடலோடு இருப்பது…. கடமைகளை செய்யாதிருத்தல் வாழ்க்கையில்லை, அதே நேரம் கடமைகள் மட்ட்மே வாழ்க்கையில்லை. தேடல்தான் வாழ்க்கை.
தேடல் என்பது நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது. அந்த நம்பிக்கையே இறை வெளிச்சம். வெற்று நம்பிக்கையா கடவுள் என்ற கேள்வி வரும். என்ன ஆதாரம் என்று புத்தி கேட்கும். நானே என்று சொல்கிறாய் தெளிந்தவர். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்.





“சாப்பாட்டுக்கு கஷ்டப்படலியா?”
எங்கனா கிடைச்சுடுதுங்க சாப்பாடு. பட்டினில செத்துட மாட்டோம். யாருனா எதுனா செய்வாங்க”
“பிச்சையெடுப்பியா?”
“வேற வழியே இல்லேன்னா அதுவும் செய்யலா. வூட்ல அம்மா கம்மஞ்சோறு வெச்சா ஏன் அரிசிச் சாறு போட மாட்டீங்களாக்கும்னு தூக்கி வாசல்ல போட்டிருக்கேன்.பிச்சையெடுக்கறபோது கம்மஞ்சோறு ஞாபகம் வரும். கம்மஞ்சோறு சாப்பிடறப்பல்லாம் பிச்சையெடுத்தது ஞாபகம் வரும். தூக்கி எறிவேனா , சொல்லுங்க.”
“வயசுக்கு மிஞ்சின புத்தி”
“இல்லீங்க. கஷ்டப்படாத வளர்ந்துட்டம்னு வெச்சிக்குங்க. சின்னச்சின்ன விஷயம்கூடப் புரட்டிப் போட்டுடும். ஒண்ணு மாத்தி ஒண்ணு அடி வாங்கினா உலக்கை தலை மேல நின்னாக் கூட தப்பிச்சுக்கறது எப்படின்னுதான் புத்தி போடும். அதுக்குத்தான் வெளியே ஓடி வந்துடறது… நாலு பேர் பாக்கறது”




பெண்ணைக் கடவுளென்று கொண்டாட முதன்முதலில் எவனுக்குத் தோன்றியது? எந்த நேரத்தில் தோன்றியது? ஏன் தோன்றியது?.........
……. நெஞ்சு வேதனையில் தளும்பி நிற்க, பிழிந்து போட்ட வேதனையில் மனசு தவிக்க, வாய் திறந்து பேச முடியாது, செயலாற்ற முடியாது. தவிக்கிற போது சொல் என்னிடம், உன் மனசு சொல் என்று முகவாய் தாங்கின போது பெண் கடவுளாயிருக்கிறாள்.

சாமர்த்தியங்களை விட ஒரு மனிதனை சந்தர்ப்பங்களே உயர்வாகவோ, தாழ்வாகவோ மாற்றுகின்றன. சந்தர்ப்பத்துக்கு ஜாதி வித்தியாசம் இல்லை அப்பா. அது சகலருக்கும் பொது. அரசனை ஆண்டியாக்கும், ஆண்டியை அரசனாக்கும். அது பிராமணனை வீரனாக்கும். வீரனை வேதியனாக்கும்.




வெற்றி பெற்றவன் வீரன். அப்போது தோல்வியடைந்தவன் யார்? எவர் தோல்வியை முகம் மலர ஏற்றுக் கொள்கிறானோ அவனும் வீரன்தான். ……அப்பா வீரம் என்பதற்குப் பெண் ஆவேசமல்ல. நிதானம், துவண்டு போகாத நிதானம், குதித்து களிக்காத நிதானம்.



 “ஆம்பளை கெஞ்சினா ஒரு கிக்குதான் எல்லா பொம்பளைக்கும்”




காதல் யோசிப்பில் பெண்ணிடம் விரைவு அதிகம். அங்கு மேனி மயக்கம் தாண்டி எதிர்கால விளைவு பற்றி யோசனையே வந்து விடும். ஆண் இதற்கு நேர் எதிர். உடம்பு மயக்கம் மீற அவனுக்கு நாளாகும். உடம்பு மயக்கம் இருக்கும்வரை எல்லா பேசும் குழப்பமாய்த்தான் இருக்கும்.




பெண்ணுக்கு புருஷன் என்பது வெறும் உடம்பல்ல சத்தி. ஔருஷன் ஒரு உணர்வு. தோளில் தலை சாய்த்து ‘அப்பாடா’ என்கிற கண் மூடும் உணர்வு.  என்னைக் காக்க ஆளுண்டு என்கிற நிம்மதி. என்னைப் பற்றிக் கவலைப்பட ஒரு ஜீவன் உண்டு என்கிற சந்தோஷம். நான் தனியில்லை என்கிற குதூகலம்.
‘ரொட்டி மட்டும் வாழ்க்கையில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு சத்தி. அது போல இன்னொன்று தோன்றுகிறது. உடலின்பம் மட்டுமே காதல் இல்லை. காதல் என்பது சிநேகம். ஆழ்ந்த அன்பு. அன்பில் விளைந்த அக்கறை. அக்கறை காட்டும் பரிவு. பரிவு தரும் உற்சாகம். உற்சாகத்தில் வளரும் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை தரும் அமைதி. வாழ்க்கைக்கு ரொட்டி முக்கியம் சத்தி. காதலில் அது ஒரு சுகம்.




பெண் துணிந்தால் இந்த உலகம் தூசுக்கு சமம். அவள் ஆணுக்கும் துணிவூட்ட…பிரபஞ்சம் மொத்தமும் அவர்கள் வசப்படும்.



“…..எல்லாத்தையும் விட…”
“உம்”
“உன் இளமை. உனக்கு நாற்பது வயசாயிருந்தா உன்னை லவ் பண்ணியிருப்பேனா? இது பேச நல்லாயிருக்காது. ஆனா இதுவும் உண்மை. யூ ஆர் யங். அற்றாக்டிவ். நீ தொட்டுத் தள்ளனும்னுதானே வம்பு. பண்ணினேன் பீச்சுல. கிட்ட உட்கார்ந்து முகத்தை அழுத்தினப்போ உலகத்துல எல்லாரும் காணாமப் போயிடணும். உன்னையும் என்னையும் தவிரனு தோணிச்சு”





“ஜார்ஜினா !”
“எட்டாங்கிளாஸ் பொண்ணு மாதிரி பேசறனா?”
“அதென்னமோ லவ்வுல மட்டும் எல்லாப் பொண்ணுங்களும் எட்டாங்கிளாஸ் நடவடிக்கைதான்”




“அழகுன்றது மனசுதான் ஜார்ஜினா. என்னைப் பொறுத்தவரை நீ உலக மகா அழகி. பேரழகி”




“உன்னைப் பாராட்டணும்”
“நான் அதுக்கு எழுதலை. பாராட்டு வாங்கறது சுலபம். கையூனி பத்துக் கரணம் போட்டா கை தட்டுவாங்க. சினிமால அதானே பண்றான். ஜனங்க பிளாக்ல டிக்கட் வாங்குதே”
“பிறகு எதுக்குடா எழுதினே?”
“நான் என்னோட பேசறதுக்கு”
“ஏன் பெசணும்?”
“என்னை நல்லவனாக்கிக்கற்துக்கு”




சந்தோஷம் உள்ளவர்களால்தான் சந்தோஷம் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இது புரிந்தவர்கள் பாக்கியவான்கள்
“ஒரு மதம் எப்போ வெறியாகுது தெரியுமா தம்பி. அது பொறுக்கப்படுகிறபோது. அது தடுக்கப்படுகிறபோது”





கற்றுக் கொடுத்துக் கடவுள் தன்மை வரும்னா, உலக்த்துல நிறைய ஆள் கடவுளாயிட்டிருப்பான். மூணு தலைமுறைக்கு முன்னாடி கிறிஸ்தவரானவங்க. நாலாம் தலைமுறையில இந்து ஆகக் கூடாதா? இடது போனா சரி, வலது போனா தப்பா?




அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம்.. அம்மாதான் கடவுள். எல்லா மதத்திலேயும், எல்லா தேசத்திலேயும். ஏன்? எதனால்? அவளுடைய கருப்பையை விட சந்தோஷமான இடம் எதுவுமே இல்லை இந்த உலகத்துல.




“….நாளைக்கு உனக்கும் அவனுக்கும் பிணக்கு வந்தா அதைப் பசங்க சிரிபு தீர்க்கும். பெத்தது கஷ்டப்படும்மேனு பிரியாது இருக்கத் தோணும். ஊர்ல நூற்றுக்குத் தொண்ணூறு குடித்தனம் குழந்தைகளால ஒத்துமையா இருக்கு.”





……………..
……………..
இங்கிருப்பது அங்கு இல்லை
அங்கிருப்பது இங்கு இல்லை
இல்லை என்பதெங்கு என்று
என் மனசு தெடும்…
இல்லாததைக் தேடுவதில்
கெட்ட சுகம் காணும் !
தேடலது என்னவென்று
இன்று கண்டு கொண்டேன்….
தேடுவதை விட்டு விட்டுத்
தேடலாக நின்றேன்

பனி விழும் மலர் வனம் – கற்றுக் கொடுத்தவை


பாலகுமாரன் பக்கங்கள் 12:

பனி விழும் மலர் வனம்கற்றுக் கொடுத்தவை


வாழ்க்கை டிராக் போட்ட மாதிரி இல்லை. அது ஒரு காடு திசை தெரியாத பாதை இல்லாத காடு. எது வேணா எப்ப வேணா, யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். மரம் முறிஞ்சு விழலாம். புலி பாஞ்சு அறையலாம். எதுக்கும் தயாரா இருக்கத் தெரியாதவரை பெண்கள் கஸ்டடில இருக்கற சாமான்கள்தான். கால்நடைகள் தான்.அப்புறம் ஆம்பிளை டாமினேஷன்னு வெட்கமில்ல்லாம குரல் மட்டும் கொடுக்கறதுல என்ன பிரயோசனம்?



“இங்கே தனித்து நிற்றல் எப்படி சாத்தியம்? வாழ்க்கைக்காடு மாதிரி இருக்கிறது என்கிறாள் நாடு. அதனால்தான் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறேயோ ? கை கோர்த்தபடி போகிறோமோ ? பயம்தான். குடும்பமா? அச்சத்தினால்தான் கூட்டு வாழ்க்கையா? ஆனால் குடும்பம்தான் பயமுறுத்துகிறது. பலத்தை வெற்றி கொள்ள முடியாமல் போகிறது. தனிமையைத் தவிர்க்க திருமணத்தாலேயே தனிமை. இப்பேர்ப்பட்ட சிக்கல் பயத்தத் தவிர்க்க குடும்பம் குடும்பமே பயமுறுத்தும்”



போர் குளத்து முதுகைக் கூழாங்கல்லால்
குத்திக் கிளறுவதை நிறுத்து.
அடங்கின நெஞ்சில்
ஆசைகள் எறிந்து
ஆட்டம்  பார்ப்பது அசிங்கம்
யாரும் அறியாது கெட்டிக் கரை உடைக்க
வட்டச் சிற்றலையால் முடியாது.
ஓடுகால் நதியல்ல
எறிந்தாலும் சிலுக்கென்று
சிரித்து விட்டுப் போக.

இது குளம். சலனத்தை
சல்லாபத்தால் மறைக்கத் தெரியாத ஜடம்.
பல் காட்டும் உன் பட்டணக் கரை
அலைவரிசையில் நின்று உன் வரிசை காடு.
இடுப்பு நனைய இளித்து நில்.
எழுந்து போ.
என்னையும் குளத்தையும்
விட்டு.



வண்ணத்துப் பூச்சி:
எழுதி முடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதம்
விலாசம் தேடித் தவிக்கிறது.



 விட்டில் பூச்சிகள் :
முட்டி முட்டி பால் குடிக்கின்றன
நீலக் குழல் விள்க்கில்
விட்டில் பூச்சிகள்



… தேன் எப்படிக் குடிச்சாலும் தித்திப்புத்தான் அப்படி எந்த நேரத்திலும் சுவையை உணர்ந்து சந்தோஷ்மாய் இருக்கறதுதான் சரி. எலிங்கற அறுப்புலேர்ந்து தப்பிக்க முடியாது. கடவுள்ங்கிற புலியை எதிர்க்க முடியாது. நரகத்திலேர்ந்து தப்பிக்க முடியாது. என்னதான் செய்வான் மனுஷன். தேனை ருசிக்கரதுதான் சரி. தேனுக்கு ஆசைப்படறதுதான் சரி. ஐயே இப்பப் போய் தேன் சொட்டரதேன்னு அழறதுதான் பாவம். மரணம் நிச்சயம் மௌனி. காலம்ங்கற எலி நம்ம உயிர்க் கொடிய அறுத்துண்டே    இருக்கு.


…”புனிதாவுக்கு காயம் படக்கூடாதுங்கற கவலைதான் அதிகம் வந்தது எனக்கு… பிகாஸ்….பிகாஸ்…”
“யூ லவ் புனிதா வெரிமச். இல்லையா ?  நீங்க செய்தது சரி. காதல் என்பது விட்டுக் கொடுத்தல். சில சமயம் காதலையே விட்டுக் கொடுத்தல்”



 “ நேசிக்கறவங்களை சிரமத்துல, ஏடுபடுத்த முடியாத நிலைதான். அன்பு, காதல் எல்லாம்.”.

பச்சை வயல் மனது – கற்றுக் கொடுத்தவை


பாலகுமாரன் பக்கங்கள் 11:

பச்சை வயல் மனதுகற்றுக் கொடுத்தவை


எனக்குள்ளேயும் எப்போதாவது
இடி விழுந்து மழை பெய்யும்
மண் நனைந்து மனம் விசும்
போ மலரும் நாற்றங்கால் தலை சிலுப்பும்
வண்ணத்துப் பூச்சி படபடக்கும்
மண்புழு நகர்ந்து நகர்ந்து
உயிர் கிளறும்
இது வசந்தம்தான். இயற்கைதான்
வரவேற்றுப் பாடதான் கவியில்லை
கவிஞனுக்காக்ய் வசந்தம் காத்திருக்குமா..?
காற்று மெல்ல வசந்தத்தைக்
கடத்திக் கொண்டு போகும்
சருகுகள் தரையிறங்கி
பூமி வெடிப்பில் சிக்கிக் கொண்ட
மண் புழுவை மெல்ல மெல்ல மூடும்.



“யாரும் ஒலகத்துல மோசமில்லை. சூழ்நிலைதான் காரணம். சூழ்நிலையைத் தாண்டி உறுதியா நிக்க எல்லாருக்கும் முடியாதுங்க.”
“வேதனைப்பட்டவர்களுக்கு வேதனையின் வலி தெரியும்னு யோசிக்கிறேன்”
பயம்தாங்க பொய்க்கு அடிப்படை…….
…….ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் அதனாலேயே நம்ம தேசத்து திருமணம் எல்லாம் அசிங்கமாயிடுச்சு. இன்னும் எத்தனை பொய் இருக்குமோன்னு சந்தேகம் வருது. பயம் மேலும் பொய் சேர்க்குது. கற்பு மட்டும் உயர்ந்த குணம் இல்லீங்க. உண்மையா இருக்கறது, கோவம் இல்லாம இருக்கறது. இதுதான் நல்ல குணம்….”
  “பாதிப்புக்கு பதில் பாதிப்பு வாழ்க்கையாயிடக் கூடாது”



….. போர் செய்து ஜெயிச்சுட்டா பிரச்னை தீருங்களா? புரிஞ்சுக்கறதுதான் தீர்வு. அதுக்கு ஒரு நிதானம் வேணும். நிதானத்துக்கு வர மன அமைதி காரணம். மன அமைதிக்கு கான்ஷியஸ்னஸ் அடிப்படை. கான்ஷியஸோட இருக்கறதுதாங்க வாழ்க்கை. எது செய்தாலும் என்ன செய்யறோம்னு நாலு பக்கமும் யோசிச்சுப் பாக்கறதுதான் வாழ்க்கை. கோபமா இருக்கறதுதான், சொன்ன எல்லாத்துகும் எதிரி. அது குழப்பம்தான் கொடுக்கும்.



கவிதைங்கறது ஒரு நல்ல அனுபவம். எல்லா நல்ல அனுபவமும் எழுதினாலும், எழுதாட்டாலும் கவிதைதான். நல்ல கவிதைக்கு. ஒருத்தர் காத்திருக்கணும்.

Sunday, August 18, 2019

உள்ளம் கவர் கள்வன் – கற்றுக் கொடுத்தவை





பாலகுமாரன் பக்கங்கள் 10:

பாலகுமாரன் பக்கங்கள் 10:

உள்ளம் கவர் கள்வன்கற்றுக் கொடுத்தவை


காதல் என்பது எது வரை ? கல்யாண காலம் வரும் வரை.
கல்யாணம் என்பது எது வரை ?   கழுத்தினில் தாலி விழும் வரை
தாலிதான் கல்யாணமா? குடித்தனம் நடத்துவது கல்யாணமில்லையா?
குழந்தை பெறுதலா ?
படிப்பு, பண்பு சொல்லித்தருதல் விசேஷமில்லையா?  பருவத்தின் வியப்புக்களைப் போதிக்க வேண்டாமா? ஒவ்வொரு கல்யாண சந்தோஷமாய் குடித்தனம் பண்ண முடியாதா? உலக ஈர்ப்பு எல்லாம் அடங்கி அறுபதாம் கல்யாணமும் சதாபிஷேகமும் உறவி, நட்பை, ஸ்நேகத்தைப் பலப்படுத்தாதா? தொடர்ந்து சாகிற வரை காதலித்தால் தினம் தினம் சந்தோஷம் கை கூடாதா?


கல்யாணம் என்பது என்னவென்று யாருக்கும் புரியல்லையா? கல்யாணம் என்பது என்ன? நீ என் மனைவி, என்னில் சரி பாதி. நான் உன் புருஷன். உன்னால், உன்னில் முழுமையானவன். இதைக் காதலில்லாமல் எப்படி ஸ்ய்ய முடியும் > காதலற்று செய்வதில் என்ன லாபம்?


  
எதிராளி கத்தி வைத்திருந்தால் நீயும் கத்தி வைத்துக் கொள். தெளிவுள்ளவனுக்கு கத்தியும், கவசமும் கூட சமாதானக் கருவிகள்



அலட்சியப்படுத்த அலட்சியப்படுத்த எதிராளி அதிகம் நெருங்குவான்,
திறமையை மட்டம் தட்ட மட்டம் தட்ட அதிக ரோஷம் காட்டுவான்.
எதிரி நெருங்கியது குளிப்பாட்டு ரோஷமுற்றதும் பாரமேற்று.
உதவிக்கு வந்தவனை உதவி பெறும் வரை உறவாகக் கொள்.



கடவுள் என்பது மோகவலை.  உடம்பு மயக்கம், பொருள் தீனி கேட்கும் அகோரப்பசி . நெஞ்சு வெப்பம் பொங்கிப் பொங்கி உடல் முழுவதும்வழிவடஹை தெளிவாய் உணர முடிகிறது. இந்த வெப்பத்தில் என்னென்னவோ மாறுதல்கள் நிகழ்கின்றன. கால்கள் வலுவிழந்து போகின்றன. கண்களில் பரவுகிறது. தொடைகளில் இறுக்கம் நிலவ, தோள்களை யாரோ அழுத்தும் உணர்வு வருகிறது. இடுப்பில் நெகிழ்வு கூடுகிறது. மார்புகளில் திண்மை வருகின்றது. வயிறு குழைகிறது. மூச்சில் ஹிம்சை நோகிறது. விரல்கள் தவிக்கின்றன. பிடறி வியர்க்கிறது. தன் கன்னத்தைத் தானே இழுத்து கிள்ளிக் கொள்ளத் தோன்றுகிறது. உதடு கனிந்து போகிறது. ஹா ஹா ஹா என்று மனசு  இடம் தெரியாமல் அலைகிறது. எதிலும் ஒட்டாமல் படபடக்கிறது.  சார்பில்லாமல் உறுதியாய் நிற்க முடியவில்லை. ஜன்னல் கம்பிகளை இறுகப் அற்றிக் கொள்ள தோன்றுகிறது. அதில் கன்னம் இழைத்து நிற்கும் ஆசை வருகிறது. மொத்த உடம்பும் ஜன்னல் சட்டத்தில் அழுந்தப் பதிந்து இழைய இழைய இன்னும் படபடப்பு கூடுகிறது.



காதல் என்பது உடம்பு மயக்கம், காதல் என்பது மோக வலை. ஒரே மூச்சில் வலையை அறுத்துப் போட்டு விடலாம். அப்படி செய்ய இஷ்டமில்லை. இது பிடித்திருக்கிறது. வலையில் அகப்பட்ட மான் குட்டி எல்லா இழுவை முயற்சியும் செய்து விட்டு, பேசாமல் மயங்க மயங்க நிற்குமே அந்த நிலை துவக்கத்திலேயே வந்து விட்டது. மிரண்டு தவித்த கன்றுக் குட்டியை கழுத்தைச் சொறிந்து விட,  தலை சாய்ந்து நிற்குமே அனத அசமந்தம் வந்து விட்டது.

பந்தயப் புறா – கற்றுக் கொடுத்தவை



பாலகுமாரன் பக்கங்கள் 9:


பந்தயப் புறாகற்றுக் கொடுத்தவை



எல்லா ஆண்களுக்கும் சிவசு இருக்கிறான். நூற்றுக்குத் தொண்ணூறு ஆண்கள் நல்லவர்கள்தான் செல்வி, அவர்களை உணர பெண்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. வெளிப்படுத்த ஆணுக்கு வாய்ப்பு இல்லை. நம் தேச ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பெரிய ஐஸ் கட்டி காலம் காலமாய் இருக்கிறது. இது உடைபட வேண்டும். உடைக்க முயற்சிக்க வேண்டும். 



ஆனால் யாரும் அணைத்துக் கொள்ள மாட்டார்கள் ‘நானிருக்கிறேன்’ எங்கிற உறவு எவருக்கும் கிட்டாது. கிட்டினாலும் நிரந்தரமல்ல. அண்ணனுக்கு அழுகை வந்தது, அழுதான். கோபம் வந்தது, அடித்தான். எல்லா உறவுகளும் அவரவர் மனநிலைக்கு ஏற்றபடிதான் நடப்பார்களே ஒழிய, எதிராளி மனமறிந்து ‘உனக்கு என்ன தேவை’ என்று கேட்டு நடப்பதில்லை. அப்படி கேட்கக் கூடிய ஒரு சூழ்நிலை அமைய வேண்டும். எனவே எதிர்பார்க்காதே. – உன்னை நீயே அணைத்துக் கொள். உன்னிடம் நீயே பேசு. உனக்கு நீயே உரமேற்று. எதிர்பார்த்து ஏங்கி இல்லையென்று புழுங்கிச் சாவதை விடேதுவாயினும் அசையாது இருக்கப் பழகு.



எல்லாரும் நல்லவங்க. எல்லாரும் கெட்டவங்க நல்லதும், கெட்டதும் சூழ்நிலை. அப்பத்திய மூட் பொறுத்தது இது.



ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதேயில்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகி விடுகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகைறான். பலப்பரிட்சை முடிந்து போய்ப் பழி வாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போலிருக்கிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.



யாராவது இப்போது அருகே வந்து அணைத்து, இறுக்கி ஆறுதல் சொல்லக் கூடாதா என்று ஏக்கம் பொங்கிற்று.